வண்டுகள் தொல்லை நீங்க
பொதுவாக நமக்கு பூச்சி இனங்களால் என்றுமே கஷ்டம் தான். அதுவும் மழை காலங்கள் தொடங்கிவிட்டால் வீட்டில் அட்டகாசம் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இந்த வண்டுகள் நமது உடல் ஆரோக்கியம் முதல் செடிகள் வரை பல பாதிப்புகளை தரக்கூடியது. இந்த பூச்சிகளை அளிக்க நாமும் பல முயற்சிகள் எடுத்திருப்போம் ஆனால் சிறிது காலம் இல்லாமல் இருக்கும் பிச்சிகள் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். இப்படி நமக்கு தொல்லைகளை தரும் பூச்சிகளை நமது வீட்டில் இருந்து விரட்ட பழ காலத்து வீட்டு வைத்திய முறை. நாம் முன்னோர்கள் கடைபிடித்த இதனை மட்டும் நீங்கள் உங்கள் வீட்டில் கடைபிடியுங்கள் உங்கள் வீட்டில் உள்ள பூச்சிகள் தொல்லை ஒழிந்துவிடும்.
பூச்சிகள் மற்றும் வண்டுகளை நீக்க :
உங்கள் வீட்டிற்கு பூச்சிகள் மழை காலங்களில் வருவதற்கு தட்ப வெப்பம் காரணமாகிறது. வீட்டிற்கு வெளியே உள்ள குளிர்ச்சி வீட்டிற்குள்ளே குறைவாக இருப்பதால் பூச்சிகள் வீட்டை நோக்கி படை எடுக்கும்.
நீங்கள் மாலை பொழுத்தில் உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அடைத்துவைப்பது சிறந்தது.
பூச்சிகள் ஒளி வெளிச்சத்திற்கும் படையெடுக்கும் அதனால் தேவையில்லாத சமயங்களில் விளக்குளை நிறுத்திவைப்பது நல்லது.
செடி மற்றும் மரங்களில் உள்ள வண்டுகளை நீக்குவதற்கு சோப் கரைச்சல் போதும்.
அந்த சோப்பு கரைசலை பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிப்பதால் பூச்சிகளின் தொல்லையை குறைக்கலாம்.
வினிகர் மற்றும் வெப்ப எண்ணெய்:
வினிகரின் வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காத ஒன்று. அதனால்,பூச்சிகளை விரட்டுவதற்கு ஒரு கப்பில் தண்ணீர் சேர்த்து அதில் வினிகரை சேர்த்து கலக்கி அதனை உங்கள் வீட்டில் முடுக்குகளில் தெளிக்கலாம்.
அதைபோல் வேப்ப எண்ணெய் பூச்சிகளை விரட்ட கூடியது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உடன் வேப்ப எண்ணெயை கலந்து உங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் தெளிப்பதால் பூச்சிகளின் தொல்லையை குறைக்கலாம்.
எறும்பு தொல்லையை நீக்க எளிமையான கை வழிமுறைகள்….
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |