Karappan Poochi Marunthu in Tamil
பெண்களான அனைவரும் வீட்டை எபபோதும் சுத்தமாக வைத்து கொள்ள தான் நினைப்போம். ஆனால், ஒரு சில காரணங்களால் வீட்டில் அழுக்குகளும் பூச்சிகளும் வந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல், கரப்பான் பூச்சி, அல்லி மற்றும் எலி போன்ற பூச்சிகள் நம் வீட்டின் எல்லா பகுதிகளையும் மோசம் செய்து விடுகிறது. குறிப்பாக சமையலறையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கரப்பான் பூச்சி நாசம் செய்து விடுகிறது. இதனால் நமக்கு ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்கும் வகையில், வீட்டில் இருந்து கரப்பான் பூச்சியை முற்றிலுமாக அகற்றுவது எப்படி என்பதை பின்வரும் குறிப்புகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Remove Cockroaches From Home Permanently:
குறிப்பு 1 வேப்பிலை சாறு:
வேப்பிலை பல ஆண்டுகளாக பூச்சிகள் போன்ற பல விஷயங்களுக்கு தீர்வாக இருக்கிறது. வேப்பிலையின் கசப்பு தன்மை மற்றும் அதன் கசப்பான வாசத்தினால் கரப்பான் பூச்சியினை முற்றிலுமாக அகற்றும்.
முதலில் வேப்பிலை போடி அல்லது வேப்ப எண்ணெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை, வீட்டில் கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் தெளித்து விடுங்கள்.
இவ்வாறு, நீங்கள் தினமும் இரவில் தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் கரப்பான் பூச்சி வீட்டிலிருந்து நிரந்தரமாக ஒழிந்து விடும்.
வீட்டில் உள்ள பல்லிகளை விரட்டுவதற்கு பூண்டு மட்டும் போதும்..
குறிப்பு 2 – மிளகுக்கீரை எண்ணெய்:
மிளகுக்கீரை எண்ணெயுடன் சிறிதளவு உப்பு நீர் சேர்த்து கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி கொள்ளுங்கள். இதனை, கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி வீட்டிலிருந்து நீங்கி விடும்.
குறிப்பு 3 – வெள்ளரிக்காய்:
முதலில், வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இதனை ஒரு சில்வர் டப்பாவில் சேர்த்து கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதிலிருந்து வெளிவரும் வாசனையை கரப்பான் பூச்சி விரும்பாது. எனவே, இதனால் கரப்பான் பூச்சி எளிதில் நீங்கி விடும்.
எலிகளிடம் இருந்து உங்களுடைய வாகனங்களை பாதுகாப்பதற்கு இந்த ஒரு டிப்ஸ் தெரிந்தால் மட்டுமே போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |