வீட்டுக்குள் தவளை தேரை வராமல் எப்படி தடுப்பது | How to Get Rid of Frogs Home Remedies in Tamil
பொதுவாக பலரது வீட்டில் இருக்கும் ஒரே பிரச்சனை எது என்றால் வீட்டிற்குள் தவளை தேரை இரண்டும் வருவது தான்.. இந்த பிரச்சனையை தடுக்க ஒரு அருமையான இயற்கை டிப்ஸ் உள்ளது. அந்த டிப்ஸை செய்தாலே போதும் வீட்டிற்குள் வரும் தவளை, தேரையை மிக எளிதாக தடுத்துவிட முடியும் எது எப்படி என்பதை பற்றியும், தவளை தேரை வீட்டிற்குள் வந்தால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
வீட்டிற்குள் தேரை மற்றும் தவளை வருவதற்கான காரணம்:
பொதுவாக ஒருவர் வீட்டில் தவளை மற்றும் தேரை அதிகமாக வருகிறது என்றால் அவர்கள் வீட்டிற்கு பக்கம் அதிகமாக தண்ணீர் ஓட்டம் இருந்திருக்கும் அல்லது சாக்கடை இருந்திருக்கும் அல்லதுசெடிகள் அதிகமாக இருந்திருக்கும்.
தவளை மற்றும் தேரை வீட்டிற்குள் வந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
பொதுவாக ஒருவரது வீட்டில் அதிகமாக தவளை மற்றும் தேரை வந்தால் கடனைக்க அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சண்டை சஞ்சரவுகள் ஏற்படும்.
ஒருவர் வீட்டில் அதிகளவு தவளை மற்றும் தேரை வந்தால் கண்டிப்பாக அவர்கள் வீட்டில் பாம்புகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக தவளைகள் மற்றும் தேரை வீட்டிற்குள் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தேரை வராமல் தடுக்க என்ன வழி:
பொதுவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தவளையாக இருந்தாலும் சரி, தேரையாக இருந்தாலும் சரி நன்நீர் மற்றும் சாக்கடை நீரில் தான் அதிகமாக வாழும் ஆக உங்கள் வீட்டில் அருகிலோ அல்லது உங்கள் வீட்டை சுற்றியோ சாக்கடை நீர் தேங்கி இருப்பதை அதிகம் இல்லாமல் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.
சாக்கடை நீர் தேங்கி இருப்பதை தவிர்க்கமுடியவில்லை என்றால் மண்ணெண்ணெய், பிளீச்சிங் பவுடர், சோப்பு நீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை சாக்கடை மீது தெளித்துவிடலாவும். அல்லது சாக்கடை மீது நன்கு கொதிக்கும் நீரை ஊற்றிவிட்டாலே போதும் சாக்கடையில் இருக்கும் தவளை மற்றும் தேரை மற்றும் அதன் குஞ்சிகள் மற்றும் முட்டை அனைத்தும் இறந்துவிடும். வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை செய்யலாம்.
அல்லது ஒரு ஸ்பூன் மிளகாய் எடுத்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள், அடுப்பில் சிறிதுளவு புதினா இலைகளையும் பேஸ்டு போல் அரைத்து கொள்ளுங்கள் இந்த இவற்றை தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து தவளை மற்றும் தேரை வரும் இடங்களில் அல்லது அவற்றின் மீது ஸ்ப்ரே செத்தால் போதும் அதன் பிறகு மீண்டும் தவளை மற்றும் தேரைகள் உங்கள் வீட்டை நாடி வராது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
இந்த கிச்சன் Trick மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி..!
அல்லது முக்குத்தி பூ என்று சொல்லக்கூடிய செடியை வேருடன் பிடிங்கி அதனை நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து தவளை வரும் இடங்களில் தெளித்துவிட்டல்லே போதும் மீண்டும் தவளைகள் மற்றும் தேரைகள் உங்கள் வீட்டை நாடி வராது. உங்கள் வீட்டை சுற்றி புத்தர் செடிகள் வளர்ந்து இருந்திருந்தால் அதனை முற்றிலும் அகற்ற வேண்டும்.
உங்கள் வீடு வாசலில் இரவு நேரங்களில் அதிக நேரம் லயிட் எரிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏன் என்றால் வீட்டின் வாசலில் அதிகம் நேரம் லைட் எரிந்துகொண்டு இருந்தால் அந்த வெளிச்சத்திற்கு சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் வண்டுகள் வரும், ஆக அதனை சாப்பிட தவளைகளும், தேரைகளும் வரும் ஆக இரவு நேரம் வாசலில் அதிக நேரம் லைட் எரிவதை தவிர்க்கவும்.
தவளை வீட்டிற்குள் வராமல் இருக்க மிக எளிமையான வழி இதோ அதாவது உங்கள் வீட்டை சுற்றி கல் உப்பை போட்டுவிடலாம், இப்படி செய்தீர்கள் என்றால் தவளைகள் உங்கள் வீட்டையே கண்டிப்பாக நாடாது. மற்றோரு எளிய வழி என்னவென்றால் மிளகாய் தூள் அல்லது துளசி இலையை அரைத்து அதனை தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டை சுற்றி நன்றாக ஸ்ப்ரே செய்துவிடலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |