கிச்சன் சிங்க்கில் துர்நாற்றம் வீசுகிறதா.? அப்போ இப்படி செய்யுங்க.. துர்நாற்றம் எளிதில் போய்விடும்..!

Advertisement

How To Get rid of Odor in Kitchen Sink 

நாம் எப்போதுமே சமைக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். அப்படி இல்லையென்றால் நமக்கு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். கிச்சனில் சமைக்கும் இடத்திற்கு அருகிலே பாத்திரம் கழுவுவதற்கு சிங்க் வைத்திருப்போம். அந்த சிங்க்-ஐ முறையாக பராமரிக்காமல் இருந்தால் பல்வேறு தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாக்கள் அதில் வளர ஆரம்பித்து விடும். எனவே இதனால் சிங்க்கில் துர்நாற்றம் வீச தொடங்கிவிடும். கிச்சனில் நின்று சமைக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும். எனவே அதனை சரிசெய்யக்கூடிய சில எளிய குறிப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை போக்குங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

How To Deep Clean Kitchen Sink:

டிப்ஸ் -1

முதலில் பேக்கிங் சோடாவை கிச்சன் சிங்க்கில் தெளித்து 5 அல்லது 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, சிங்க் தொட்டியை கழுவ பயன்படுத்தும் பிரஷினை கொண்டு நன்கு தேய்த்து விடவேண்டும். அதன் பின், ஒரு குச்சியினை கொண்டு சிங்க் துளையை நன்றாக குத்தி அதன் அடைப்புகளை நீக்க வேண்டும்.

 how to clean kitchen sink drain smell in tamil

இவ்வாறு செய்த பின், சிங்க் தொட்டியில் தண்ணீரை திறந்து கழுவி விடவேண்டும். அடுத்து ஆரஞ்சு பழ தோலினை கொண்டு சிங்க் தொட்டியை நன்கு தேய்த்து மீண்டும் தண்ணீரை திறந்து கழுவி விடவேண்டும்.

இப்படி செய்தால் சிங்க்கில் வீசும் துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீச தொடங்கும்.

டிப்ஸ் -2

சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க, அந்துருண்டையை சிங்க் தொட்டியில் போட்டு விடுங்கள். அந்துருண்டையை சிங்க் தொட்டியில் போடுவதன் மூலம் கெட்ட பாக்டீரியாக்கள் வருவதை தடுக்கிறது.

 how to get rid of kitchen sink odor in tamil

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..

டிப்ஸ் -3

 how to get rid of kitchen sink odor in tamil

உங்கள் கிச்சன் சிங்க்கில் துர்நாற்றம் வீச தொடங்கினால் வெள்ளை வினிகரை சிறிதளவு சிங்க்கில் தெளித்து சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிங்க்கில் உள்ள துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

டிப்ஸ் -4

 how to get rid of kitchen sink smell in tamil

எலுமிச்சை பழத்தை பயன்படுத்திய பிறகு, அதன் தோலில் உப்பினை தடவி சிங்க்கில் எல்லா பகுதியிலும் நன்கு தேய்த்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சிங்க்கில் வீசும் துர்நாற்றம் குறைந்து நல்ல வாசனை வரத்தொடங்கும்.

டிப்ஸ் -5

 how to get rid of odor under kitchen sink in tamil

சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க, புதினா இலைகளை சிங்க் தொட்டியில் போட்டு நன்கு தேய்த்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

கிச்சன் முதல் டாய்லட் வரை பளிச்சென்று இருக்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement