ஈ தொல்லை போக வழி
வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், ஈ மற்றும் கொசு தொல்லை இருக்க தான் செய்கிறது. ஈ மொய்த்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் அதற்கான முழுமையான தீர்வு கிடைக்காது. அதனால் தான் இந்த பதிவில் ஈ மற்றும் கொசு தொல்லையை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஈக்களை விரட்ட கற்பூரம்:
ஈக்களை விரட்டுவதற்கு கற்பூரம் சிறந்த முறையாகும். எப்படியென்றால் கற்பூர வாசனைக்கு ஈக்கள் வராது. இதற்கு நீங்கள் ஒரு கிண்ணத்தில் கற்பூரம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இதனை ஈக்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் தெளிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டை துடைக்கலாம்.
நறுமண பொருட்கள்:
நறுமண பொருட்களான கற்பூர எண்ணெய்,யூகலிப்டஸ் எண்ணெய், புதினா சாறு, இஞ்சி போன்ற பொருட்கள் இருந்தாலே ஈக்கள் மொய்க்காது.
அழுக்காக இருக்கும் சுவிட்ச் போர்டை புதியது போல் ஜொலிக்க வைக்க இந்த ஒரு பொருள் போதும்..!
வினிகர்:
ஒரு பாட்டிலில் ஆப்பிள் சைடர் வினிகர் சிறிதளவு, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சிறிதளவு சேர்த்து கலந்து கொண்டு மூடி விட வேண்டும். பாட்டிலின் மூடியில் சிறிது சிறிதாக ஓட்டை போட்டு கொள்ளவும். இந்த வாசனைக்கு ஈக்கள் பாட்டிலின் உள்ளே விழுந்து விடும்.
கொசுவை விரட்ட:
எலுமிச்சை மற்றும் கிராம்பு:
எலுமிச்சை மற்றும் கிராம்பு கொசுக்களை விரட்டுவதற்கு பெரிது உதவியாக இருக்கிறது. இதற்கு நீங்கள் பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளவும். இதன் உள்பகுதியில் கிராம்பை ஒவ்வொன்றாக சொருகி விடவும். இதை கொசுக்கள் அதிகமாக மொய்க்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இஞ்சி எண்ணெய்:
அகல் விளக்கில் இஞ்சி எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவும். இந்த விளக்கை கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் வைத்தால் ஒரு கொசு கூட வராது.
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெயை வீட்டில் ஒரு இடத்திலும் வைத்தாலும் சரி, அல்லது வீட்டில் தெளித்தாலும் சரி இந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.
வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை பண்ணுங்க ஒரு ஈ கூட வராது
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |