Eli Thollai Neenga
நாம் என்னதான் எலியை விரட்டுவதற்கு மருந்துகள், எலிப்பொறி கட்டை போன்றவற்றை வைத்தாலும் எலி அதில் சிக்காமல் தப்பித்து விடும். எலி சிறிய உருவத்தில் இருந்தாலும் அது புத்திசாலிதமாக செயல்படும். வீட்டில் வைத்திருக்கும் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் மற்ற வீட்டு பொருட்களை எல்லாம் கடித்து நாசம் செய்து விடும். இதனை தடுக்க நாம் என்னதான் மருந்துகள் வைத்தாலும் அது திரும்ப திரும்ப வீட்டிற்கு வந்து நாசம் செய்து விடும். எனவே இவ்வளவு தொந்தரவுகள் செய்கின்ற எலியை நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி எப்படி விரட்டி அடிப்பது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Veetil Eli Thollai Neenga:
டிப்ஸ் -1
முதலில் பூண்டு பற்களை உரித்து அதனை துருவி எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நிரப்பி கொள்ளுங்கள். இப்போது இதனுடன் துருவிய பூண்டு பற்களை சேர்த்து எலி நடமாடும் இடத்தில் தெளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் செய்து வந்தால் பூண்டின் வாசனை கண்டு எலி வீட்டிற்குள் வராது.
ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ கூட இருக்காது |
டிப்ஸ் -2
தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல்பக்கத்தில் 4 கீறல்களை போட்டு கொள்ளுங்கள். இப்போது இதில் 2 ஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய் தூளினை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு அதன் மேல் 1 ஸ்பூன் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்து வைத்து விடுங்கள்.
நாட்டு சர்க்கரையின் வாசனையால் எலி இதனை சாப்பிடும். பிறகு அதற்குள் இருக்கும் மிளகாய் தூளின் காரம் தாங்க முடியாமல் ஓடி விடும். அதன் பின் வீட்டு பக்கமே வராது.
டிப்ஸ் -3
அந்துருண்டையை வீட்டில் எலி நடமாடும் இடங்களில் வைத்து விட்டால் அவற்றின் வாசனையை கண்டு எலி வீட்டிற்கு வராது.
டிப்ஸ் -4
புதினா இலை அல்லது புதினா எண்ணெயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து எலி வரும் இடங்களில் வைத்து விட்டால் புதினாவின் வாசனையை கண்டு எலி அந்த பக்கமே வராது.
டிப்ஸ் -5
பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். பிறகு நறுக்கிய வெங்காயத்தில் கிராம்பை செருகி எலி வரும் இடத்தில் வைத்து விடுங்கள். கிராம்பு மற்றும் வெங்காயத்தின் வாசனையை கண்டு எலி வீட்டிற்குள் வராது.
டிப்ஸ் -6
மிளகு தூளினை எலி நடமாடும் இடங்களில் அல்லது எலி பொந்திற்கு அருகில் தூவி விட்டால் எலி மிளகின் கார வாசனையால் அந்த பக்கமே வராமல் ஓடி விடும்.
கொசு தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு கொசு கூட இருக்காது |
டிப்ஸ் -7
யூகலிப்டஸ் ஆயிலை எலி நடமாடும் இடங்களில் ஒரு சில துளிகள் தெளித்து விட்டால் எலி வராது.
டிப்ஸ் -8
பேக்கிங் சோடாவை எலி பொந்திற்கு அருகிலோ அல்லது எலி வரும் இடங்களிலோ தூவி விட்டால் அதன் வாசனையை கண்டு வீட்டிற்குள் எலி வராது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |