கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டறிவது..? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

How To Identify Chemically Ripe Mango in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். அதாவது உங்களுக்கு மாம்பழம் என்றால் ரொம்ப பிடிக்குமா..? இந்த கேள்வி கேட்பது தவறு என்று நினைக்கிறன். ஏனென்றால் மாம்பழம் சாப்பிட பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாம்பழம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி மாம்பழம் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒரு சில வீடுகளில் மாமரம் இருக்கும்.

அவர்கள் மாம்பழத்தை இயற்கையான முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பலரும் மாம்பழத்தை கடையில் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடும் போது அந்த மாம்பழம் செயற்கையான முறையில் பழுக்க வைத்தது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள். அதனால் இன்றைய பதிவில் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டறிய சில டிப்ஸை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி..? 

நிறத்தை சரிபார்க்கவும்: 

How to Identify Chemically Ripe Mango

வேதியியல் முறையில் பழுத்த மாம்பழங்களின் மேற்பரப்பு மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களின் கலவையாக இருக்கும். அதாவது செயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களின் தோளில் ஆங்காங்கே பச்சை நிறம் காணப்படும். ஆனால் இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களில் இப்படி பச்சை நிறம் இருக்காது.

வெங்காயம் சீக்கிரமாவே கெட்டுபோய் விடுகிறதா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க

சதைப்பகுதியை சரிபார்க்கவும்: 

How to Identify Chemically Ripe Mango

செயற்கை மாம்பழம் பழுத்ததாக இருந்தாலும் அதன் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும். ஆனால் இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்கள் அப்படி இருக்காது. இயற்கையான மாம்பழங்களின் சதை பகுதி கொழகொழவென இருக்கும்.

நீரில் போடவும்: 

How To Identify Chemically Ripe Mango

மாம்பழங்களை வாங்கி வந்தால் அதை முதலில் ஒரு வாளி தண்ணீரில் போட வேண்டும். மாம்பழங்கள் தண்ணீரில் மிதந்தால், அவை இரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் என்று அர்த்தம். அதுவே மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்கினால் அவை இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

காய்கறிகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாள் கெடாமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க

 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips