வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Memory Power அதிகமாக தினமும் இரவு இதை மட்டும் செய்யுங்கள்..!

Updated On: February 24, 2023 1:13 PM
Follow Us:
How to Increase Memory Power Naturally in Tamil
---Advertisement---
Advertisement

ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் | How to Increase Memory Power Naturally in Tamil

சிலருக்கு ஞாபகம் என்பது அதிகமாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். பெரும்பாலும் யாரிடமாவது காலையில் என்ன சாப்பிட்ட என்று கேட்டால் யோசிக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது ஒரு விஷயம் கேட்டால் உடனே அவர்கள் படித்த பாடத்தில் உள்ளதை கூட அவ்வளவு தெளிவாக சொல்வார்கள். ஆனால் இப்போது இருக்கும் சின்ன குழந்தைகளிடம் கேட்க போனால் அவர்கள் காலைல என்ன சாப்பிட்டார்கள் என்று கூட யோசிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு மெமரி பவர் அதிகமாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

How to Increase Memory Power Naturally in Tamil:

இப்போது பலரும் பல இன்டர்வியூ சென்றால் அங்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்தாலும் அதனை சொல்வதற்கு நேரம் எடுக்கும். அப்போது கொஞ்சம் நேரம் கிடைத்தால் அதற்கான அர்த்தம் தெரிந்துவிடும். ஆனால் அதற்குள் நீங்கள் போகலாம் என்று சொல்வார்கள். ஆனால் அதே கேள்விக்கு சரியான பதிலை அடுத்த நபர் சொல்லி அந்த வேலை அவருக்கு கிடைத்துவிடும்.  இதிலிருந்து தெரியவருவது ஞாபகம் தான் முக்கியமான விஷயம் ஆகும்.

ஒரு இன்டர்வியூவில் நம்மை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அதேபோல் அவர்களிடம் நாம் எப்படி பதில் கொடுப்பது என்று அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்வது தான் அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இந்த ஞாபகம் சக்தி எப்போதும் நமக்கு கிடைக்க என்ன செய்யவேண்டும். அதற்கு என்ன டிப்ஸ் தேவைப்படும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள போகிறோம்..!

டிப்ஸ்: 1

முதலில் ஒரு நாளுக்கு நிறைய புத்தகம் படிப்போம் அல்லது நிறைய விஷயம் தெரிந்துகொள்வோம். இதுபோல நிறைய உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு பாடல் கேட்கிறோம் என்றால் அதனுடைய முதல் வரி தெரியவில்லை என்று நிறைய யோசிப்போம். அல்லது அந்த பாடல் வரி தெரியும் ஆனால் சொல்லமுடியாமல் இருப்போம். அதற்கு என்ன செய்வது இந்த டிப்ஸ் போதும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை Follow பண்ணவேண்டும்.

குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இதை தினமும் Follow பண்ணுங்க. காலை முதல் இரவு வரை பள்ளியில் என்ன கற்றுக்கொண்டோம். அடுத்து வேலை பார்க்கும் இடத்தில் என்ன கற்றுக்கொண்டோம் என்று நிறைய இருக்கும்.

அதில் இருக்கும் நல்லதை சரியாக காதில் வாங்கிக்கொண்டு கெட்டதை அப்படியே விட்டுவிட்டு அன்று இரவு தூங்குவதற்கு முன் காலை முதல் இரவு வரை நாம் என்ன தெரிந்துகொண்டோம், வேலையில் என்ன கற்றுக்கொண்டோம் என்று அனைத்தையும் ஞாபகபடுத்தி பார்க்கவேண்டும்.

இதன் மூலம் நீங்கள் எப்போது எதை கேட்டாலும் அதை மிகவும் எளியதாக சொல்லமுடியும். அனைத்தும் மனதில் பதிந்துவிடும், இதனை தினமும் செய்யவேண்டும்.

ஞாபக சக்தி குறைவா..! இனி கவலையே வேண்டாம்..!

டிப்ஸ்: 2

சிலருக்கு சில நாளில் நடந்த அனைத்தையுமே வேகமாக சொல்வார்கள். அதேபோல் சிலர் தினமும் என்ன நடந்தது என்று அனைத்தையும் சரியான தேதியை வைத்து தெளிவாக சொல்வார்கள். அதேபோல் நாமும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு இதை செய்யுங்கள்..!

ஒருவரிடம் நாம் அங்கு சென்று வந்தேன் என்று சொல்வோம். எப்போது சென்றாய்  என்று கேட்டால் அதற்கு நீங்கள் போன வியாழக்கிழமை போனேன் என்று சொல்வதை விட, அன்றைய தேதியை சொல்லி சொல்லவேண்டும். அப்போது தான் உங்களுக்கு அனைத்து நாளும் அந்த நாளில் நடந்த அனைத்தும் சரியாக ஞாபகத்தில் இருக்கும்.

ஏன் தேதி சொல்லவேண்டும் என்றால் வருடத்திற்கு நிறைய புதன் கிழமை உள்ளது. ஆகவே அதனால் இது உங்களுக்கு நியாபகம் அதிகமாக இருக்கும்.

டிப்ஸ்: 3

சின்ன குழந்தையாக இருந்தால் ஸ்கூல்ல என்ன நடந்தது, நீ என்ன படித்தாய், அதனை எனக்கு சொல் என்றும் மிஸ் என்ன சொல்லி கொடுத்தார்கள் என்று அனைத்தையும் குழந்தைகளிடம் கேட்டு பழகுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு அனைத்தும் மனதில் பதிந்துவிடும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Floor Cleaning Tips and Tricks in Tamil

தரை கண்ணாடி போல பளபளக்க இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்..!

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!