துணிகள் எப்போதும் Fresh- ஆ இருக்க இப்படி செய்து பாருங்கள்
வணக்கம் நண்பர்களே..! நாம் அனைவருக்கும் மிகவும் கஷ்டமாக உள்ள ஒரு விஷயம் என்றால் அது நமது துணிகளை எப்படி மிகவும் தூய்மையாகவும், எப்போதும் புதியது போல வைத்துக் கொள்ளுவது என்பதுதான். அதற்கான சில டிப்ஸ் பற்றித் தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன டிப்ஸ் என்று தானே யோசிக்கிறீர்கள்..! இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
துணிகளை எப்படி மிகவும் தூய்மையாகவும், எப்போதும் புதியதுப்போலவும் வைத்துக்கொள்ளுவது:
டிப்ஸ் – 1:
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் ஆடைகளில் உள்ள அழுக்கை நீக்கி தூய்மையாக துவைக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். ஆனால் இனிமேல் அப்படி கஷ்டப்பட வேண்டாம். இந்த ஒரு டிப்ஸை செய்து பாருங்கள் உங்களுக்கே மிகவும் எளிமையாக இருக்கும்.
முதலில் இந்த ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை துவைப்பதற்கு முன்னால் ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி அதில் 1 டீஸ்பூன் கல்லுப்பை சேர்த்து அதனுடன், நமக்கு தேவையான அளவு சோப்பு பவுடரை சேர்த்து அதனை நமது கைகளால் நன்கு கலந்துவிட்டப்பிறகுதான் அதில் நமது துணிகளை ஊறவைக்கவேண்டும்.
அப்படி செய்யவில்லையெனில் சோப்பு பவுடரில் உள்ள Chemical நேரடியாக நமது துணிகளில் படும். அப்படி படுவதால் நமது துணிகள் விரைவில் சேதமடைந்துவிடும். இப்படி ஊறவைத்து பிறகு நமது அந்த ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை துவைத்தால் மிகவும் விரைவில் மற்றும் மிகவும் எளிமையாகவும் துவைத்துவிடலாம்.
டிப்ஸ் – 2:
அடுத்து நாம் அனைவரின் வீட்டிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களின் சீருடைகளை துவைக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். ஆனால் இனிமேல் அப்படி கஷ்டப்படவேண்டாம்.
அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை ஊற்றி அதில் சிறிதளவு சோப்பு பவுடரை சேர்த்து அதனை நமது கைகளால் நன்கு கலந்து விடவும். அதில் பள்ளிச்சீருடைகளை ஊறவைக்க வேண்டும். பிறகு நமது கைகளினாலேயே தேய்த்து துவைக்க வேண்டும்.
பொதுவாக நாம் ஊறவைத்து துவைக்கும் அனைத்து துணிகளையும் 10-15 நிமிடத்திற்குள் துவைத்துவிட வேண்டும். அப்போதுதான் விரைவில் கிழிந்தோ,சுருங்கியோ போகாது.
டிப்ஸ் – 3:
நாம் அனைவரின் வீட்டிலும் புதிதாக பீரோல் வாங்கினால் அதிலிருந்து பெயிண்ட் வாசனை மற்றும் வார்னிஷ் வாசனை வீசுவதால் அந்த வாசனை நமது துணிகளின் மீதும் வரும்.
அதனை தவிர்க்க நாம் புதிதாக பீரோல் வாங்கினால் முதலில் செய்யவேண்டியது அதன் உள்ளே நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை சிறிதளவு தூவிவிட்டு அதனை ஒரு சிறிய துணியால் தேய்த்து அதற்கு மேலே பழைய செய்தித்தாள்களை விரித்து விட வேண்டும். பின் செய்தி தாளின் மேல் நமது துணிகளை மடித்து வைத்துக்கொள்ளலாம்.
டிப்ஸ் – 4:
நமது துணிகள் மிகவும் தூய்மையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, உப்பு, அதனுடன் துணிகளில் நல்ல வாசனை வருவதற்காக 1 டீஸ்பூன் Comfort Liquid போன்றவை சேர்க்கவும்.
இவை மூன்றையும் சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பிறகு அதனை ஒரு சிறிய துணியில் வைத்து நன்கு கட்டி அதனை நாம் துணி வைத்திருக்கும் இடத்தில் வைப்பதால் துணிகள் மிகவும் தூய்மையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.
இதையும் படியுங்கள் => இந்த வீட்டு குறிப்புகளை தினமும் பின்பற்றுங்கள்…! ஈசியாக இருக்கும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |