How to Keep House Cool in Summer Naturally in Tamil
நண்பர்களே வெயில் காலத்தில் எல்லாரும் குளுகுளுனு இருப்பீர்கள்..! சும்மா உங்களை கலாய்த்து பார்த்தேன்..! வெயில் காலத்தில் வெளியில் செல்ல அவ்வளவு பயமாக இருக்கும் அல்லாவா..? யாருக்கு இருக்கிறதோ இல்லையோ AC –யில் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். பொதுவாக AC யில் இருப்பவர்களுக்கு அதிகளவு வியர்வை வந்தது இல்லை. ஆகவே இதுபோல் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதன் மூலம் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
என்னதான் AC இருந்தாலும் கொஞ்சம் நேரம் AC இல்லையென்றால் அவர்களுக்கு அது நரக வாழ்க்கை போல் இருக்கும் என்று அவர்களே சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த AC பேன் என்று எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் வியர்வை இல்லாமல் இருப்பார்கள். இது அனைத்தும் எப்படி என்று நினைப்பீர்கள். பொதுவாக நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். அதேபோல் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டையும், உடலையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
How to Keep House Cool in Summer Naturally in Tamil:
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முதலில் மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவைப்படும் தண்ணீரை குடிக்க வேண்டும். அதன் பிறகு குளிச்சியான பழங்கள் காய்கறிகள் என் சாப்பிடவேண்டும். அப்போது தான் உடலில் தேவைக்கு அதிகமான நீர் சத்துக்கள் இருக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
அதேபோல் ஜூஸ் வகைகள் அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை அளிக்கும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். அப்போது தான் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் எவ்வளவு வெயிலில் சென்றாலும் குளிர்ச்சியாக இருக்கும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள்
வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைப்பது?
AC இருக்கும் வீடானது குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் AC இல்லையென்றால் வீடே வெப்பமாக மாறிவிடும். இது எதனால் என்று உங்களுக்கு தெரியுமா..?
ஏனென்றால் AC -யும் வெப்பத்தை தான் நமக்கு கொடுக்கும். ஆனால் அது குளிர்ச்சியாக இருப்பதை உங்களுக்கு உணர்த்துவதால் அப்படி உள்ளது.
சரி வீட்டை எப்படி குளிச்சியாக வைப்பது அதுவும் AC இல்லாமல், இது செய்வதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இதன் மூலம் உங்களுக்கும் நன்மையை அளிக்கும். ஆகவே அதனை செய்வது நல்லது.
முதலில் உங்கள் வீட்டிற்குள் எதன் வழியாக வெப்பம் வருகிறது என்று பாருங்கள்..! உங்கள் வீட்டில் ஜன்னல் வழியாக வருகிறது என்றால்,
முதலில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அங்கு டேபிள் ஃபேன் இருந்தால் அதை வைத்து, அதனை ON செய்து அந்த ஃபேனுக்கு முன் பக்கம் ஒரு வட்டாவில் வெட்டி வேர், வேப்ப இலை மற்றும் இவற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். அதன் பின்பு அந்த ஃபேன் மூலம் வரும் காற்று அந்த நீரில் பட்டு அது உங்கள் வீட்டை நன்கு குளிர்ச்சியாக வைக்கும்.அதேபோல் வீட்டிற்குள் நிறைய செடிகளை வளர்க்கலாம். சிலர் அழகிற்கு என்று வளர்க்கும் செடிகள் கூட நமக்கு நன்மைக்கு தான். அதாவது மணிபிளாட் , கற்றாழை, துளசி என இது போன்ற செடிகளை வளர்ப்பது நல்லது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |