உணவு பொருள் வீணாவதை தடுக்க
பொதுவாக நாம் கிச்சனில் சமைப்பதற்கு பயன்படுத்தும் சமையல் பொருட்கள் அனைத்தையும் நாம் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதாவது பெரும்பாலான பொருட்கள் எளிதில் வண்டுகள் வைக்க தொடங்கிவிடும். மேலும், ஒரு சில பொருட்கள் எளிதில் கெட்டுப்போய் விடும். எனவே நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் எளிதில் வந்து பிடிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களை எப்படி நீண்ட நாட்களுக்கு சேமித்து பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சமையல் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க டிப்ஸ்:
கடலை நமத்து போகாமல் இருக்க:
கடலை வாங்கி வந்ததும் அதனை வாணலில் போட்டு லேசாக வறுத்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்தால்நீண்ட நாட்களுக்கு கடலை நமத்து போகாமல் இருக்கும்.
புழுங்கல் அரிசியில் வண்டு வராமல் இருக்க:
புழுங்கல் அரிசியில், மூன்று அல்லது நான்கு பிரிஞ்சி இலையை போட்டு வைத்தால் எறும்பு, வண்டு போன்ற பூச்சிகள் வராமல் இருக்கும்.
நெய் கெட்டுப்போகாமல் இருக்க:
நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை போட்டு வைத்தால், நெய் நீண்ட நாட்களுக்கு நறுமணத்துடனும் கெட்டுப்போகாமலும் இருக்கும்.
பெருங்காயத்தூள் கட்டி பிடிக்காமல் இருக்க:
பெருங்காயத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் காம்புடன் உள்ள பச்சை மிளகாய் ஒன்றினை போட்டு வைத்தால் பெருங்காயத்தூள் கட்டிபிடிக்காமல் நீண்டநாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
எப்போதும் வாழைப்பழம் கெட்டு போகாமல் பிரஷா இருக்க இதை செய்யுங்க..!
மாவு பொருட்கள் வீணாகாமல் இருக்க:
கடலை மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவு போன்ற மாவு பொருட்களில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் வண்டுகள் வராமலும் இருக்கும்.
பருப்புகளில் வண்டுகள் வராமல் இருக்க:
அரிசி மற்றும் பருப்பு வைத்திருக்கும் பாத்திரங்களின் அடியில் ஒரு துண்டு வசம்பு போட்டு வைத்தால் பருப்பு நீண்ட நாட்களுக்கு வண்டு பிடிக்காமல் இருக்கும்.
இஞ்சி பூண்டு விழுது கெடாமல் இருக்க:
இஞ்சி பூண்டு அரைக்கும் போது தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுக்க வேண்டும். மேலும், அரைத்த பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |