கிச்சன் சிங்க் பராமரிப்பு டிப்ஸ்
ஒவ்வொரு வீட்டிலும் காலை சமைக்க ஆரம்பித்த நேரம் முதல் இரவு தூங்க போகும் வரை எப்போது கிச்சனில் வேலை இருந்து கொண்டு தான் இருக்கும். அப்படி பார்த்தால் கிச்சனில் சமைக்கும் வேலையை விட அதனை சுத்தம் செய்வது தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக சிங்க் பற்றி சொல்லவே வேண்டாம்.
ஏனென்றால் சிங்கில் துறுநாற்றம் வீசுதல், பூச்சிகளின் தொல்லை மற்றும் அடைப்பு என இதுபோன்ற பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து கொண்டே இருக்கும். அப்படி பார்த்தால் சொல்லும் போதே நமக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் தினம் தினம் சுத்தம் செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய வேலையாக இருக்கும். அதனால் தான் உங்களது வேலையை மிகவும் எளிமையாக்க இன்று கிச்சன் சிங்க் பராமரிப்பு டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கிச்சன் டிப்ஸ்: 1
சிங்க் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் மற்ற இடங்களை விட சிங்க் தான் சுத்தமே இல்லாமல் கறைகளுடன் இருக்கும்.
ஆகையால் 1 ஸ்பூன் பல்துலக்கும் பேஸ்டை வைத்து சிங்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்தால் போதும் சிங்க் நன்றாக பளபளப்பாக மாறி விடும்.
கிச்சன் டிப்ஸ்: 2
அதன் பிறகு இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கிச்சன் சிங்கில் கல் உப்பை தூவி விட்டு அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து சிங்கில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை அதில் ஊற்றி விடுங்கள்.
இத்தகைய முறையினை நீங்கள் செய்வதன் மூலம் சிங்கில் பூச்சிகள் எதுவும் இரவு நேரத்தில் வராமல் இருக்கும். மேலும் துறுநாற்றமும் வராமலும் இருக்கும்.
கிச்சன் டிப்ஸ்: 3
அதோடு மட்டும் இல்லாமல் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்றாக கொதிக்க வைத்துள்ள சுடு தண்ணீரில் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக மீண்டும் 2 நிமிடம் வரை கலந்து கொண்டு அதனை சிங்கில் ஊற்றினால் போது அடைப்பு எதுவும் இருந்தால் அது நீங்கி விடும்.
அடி பிடித்த பாத்திரங்களை கழுவுவதற்கு இந்த ஒரு சோப் மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |