வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு அருமையான டிப்ஸ் பற்றி கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள் அல்லவா..! பொதுவாக நாம் கடைக்கு காய்கறி வாங்க செல்கின்றோம் என்றால் முதலில் நாம் வாங்குவது வெங்காயம் தான். வெங்காயம் போட்டு சமைக்காத உணவுகளே கிடையாது. அப்படி நாம் வெங்காயத்தை மட்டும் 3 நாட்களுக்கு வருவது போல வாங்கி வருவோம். ஆனால் வெங்காயத்தை நாம் 1 மாதம் வரை கெட்டுப்போகாமல் வைத்து கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Keep Onions From Spoiling Tips in Tamil:
வெங்காயத்தை மாசக்கணக்கில் கெட்டுப்போகாமல் வைத்து கொள்வதற்கான டிப்ஸை தெரிந்து கொள்வதற்கு முன் வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டாமா..? வெங்காயத்தில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 சின்ன வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா
வெங்காயம் முளைப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? பொதுவாக வெங்காயம் வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கோடை காலத்தில் அடிக்கடி முளைக்க தொடங்கும். இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கும் போது, வெங்காயத்தில் சேமிக்கப்பட்ட ஆற்றல் மிக விரைவாக குறைந்து வெங்காயம் முளைக்கத் தொடங்குகிறது.
காய்கறிகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாள் கெடாமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க |
♦ பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளில் இதுவும் ஓன்று. எந்த காய்கறியாக இருந்தாலும் அதை பிளாஸ்டிக் கவரில் வைப்பது. இதனால் காய்கறிகள் விரைவாகவே கெட்டுபோய் விடுகிறது. அதுபோல தான் வெங்காயமும், வெங்காயத்தை நாம் பிளாஸ்டிக் கவரில் வைப்பதால் அது சீக்கிரமாகவே கெட்டுபோய்விடும். அதனால் வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
♦ பொதுவாக நாம் அனைவருமே கவனித்திருப்போம். கடைகளில் வெங்காயத்தை சணல் மூட்டைகளில் வைத்திருப்பார்கள். இப்படி சணல் மூட்டையில் வைப்பதால் வெங்காயம் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கிறது. அதனால் நீங்களும் இனி வெங்காயத்தை சணல் பைகளில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்
♦ அதுபோல நீங்கள் இப்போது வெங்காயம் வாங்கி வந்தால் அதை கவரிலோ அல்லது பாத்திரத்திலோ போட்டு மூடி வைக்காமல், வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில் வையுங்கள். இப்படி செய்வதால் வெங்காயம் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமலும், முளைக்காமலும் இருக்கும்.
♦ அடுத்து நம்மில் பலரும் செய்ய கூடிய தவறுகளில் இதுவும் ஓன்று. அதாவது நாம் காய்கறிகளை வாங்கி வந்தால் அதை அப்படியே ஒன்றாக வைத்துவிடுவோம். இப்படி செய்வது மிகவும் தவறு. ஏனென்றால் உருளைக்கிழங்கு, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் இவற்றுடன் வெங்காயத்தை வைத்தால், இது போன்ற காய்கறிகளில் இருக்கும் சிட்ரிக் அமிலம் வெங்காயத்தை சீக்கிரமாகவே கெட்டுப்போக செய்துவிடுகிறது.
அதனால் இனி வெங்காயம் வாங்கி வந்தால் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |