How To Keep Salt Dry in Rainy Season in Tamil
பொதுவாக மழை என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் மழைக்காலம் வந்துவிட்டால் கூடவே பல பிரச்சனைகளும் சேர்ந்தே வந்து விடுகிறது. அதாவது, உடல் ஆரோக்கியம் முதல் துணி காயவைப்பது முதல் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக மழைக்காலம் வந்துவிட்டால் நாம் வீட்டில் உள்ள சில பொருட்களும் எளிதில் கெட்டு விடுகிறது. முக்கியமாக, சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு ஆனது, தண்ணீர் விட்டு பிசுபிசுப்பாக இருக்கும் அல்லது நீர்கோர்த்து முழுவதுமாக தண்ணீர் போல் இருக்கும் எனவே, இதனை தடுக்க நாம் சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அவற்றை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
மழைக்காலத்தில் உப்பு நேர் கோர்க்காமல் இருக்க டிப்ஸ்:
உப்பை சேமிக்கும் முறைகள்:
உப்பை எப்போதும் ஈரப்பதம் இல்லாத, மூடி கொண்ட பீங்கான் பாத்திரம் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
அடுத்து, இதில் ஈரப்பதம் இல்லாத பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது பீங்கான் ஸ்பூன் போட்டு பயன்படுத்த வேண்டும்.
முக்கியமாக, உப்பை தண்ணீருக்குள் அருகில் வைக்க கூடாது. அதற்கு மாறாக உலர்ந்த இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும்.
உப்பை பயன்படுத்திவிட்டு உடனே அதனை மூடி மூடி வைத்துவிட வேண்டும்.
இந்த மழைக்காலத்தில் துணி காய மாட்டிகிறதா அப்போ இந்த டிப்ஸை Follow பண்ணுங்க
டிப்ஸ் -1
உப்பு ஜாடியில் சிறிதளவு அரிசியை போட்டு மூடி வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைத்தால் மழைக்காலத்தில் உப்பு கட்டி விழாமலும் நீர் கோர்க்காமலும் இருக்கும்.
டிப்ஸ் -2
கல் உப்பு ஜாடியில் ஈரப்பதன் இல்லாத சிறிதளவு புளியை சிறிய உருண்டையாக உருட்டி உப்பு ஜாடிக்குள் போட்டு மூடி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், கல் உப்பில் நீர் கோர்க்காமல் இருக்கும்.
டிப்ஸ் -3
மழைக்காலத்தில் உப்பு நீர் கோர்க்காமல் இருக்க, உப்பு ஜாடியினுள் 4 அல்லது 6 கிராம்புகளை போட்டு மூடி வைக்க வேண்டும்.
டிப்ஸ் -4
உப்பு ஜாடியினுள் சிறிதளவு கிட்னி பீன்ஸை போட்டு நன்கு குலுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிட்னி பீன்ஸ் ஆனது ஈரப்பதத்தை உறிஞ்சி உப்பை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்கும்.
மழைக்காலத்தில் துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க டிப்ஸ்
டிப்ஸ் -5
உப்பு ஜாடியின் அடிப்பகுதியில் சோடா கிராக்கர் பிஸ்கட் ( Soda crackers biscuits) வைத்து அதன் மேல் உப்பை கொட்டி வைப்பதன் மூலம் உப்பு எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |