தக்காளி விலை ஏறிக்கிட்டே போகுது.. அதனால் தக்காளி நீண்ட நாட்கள் வருவதற்கு இதை செய்யுங்க..

Advertisement

தக்காளி கெட்டு போகாமல் இருக்க

நாம் சாப்பிடும் உணவுகளில் முக்கிய பொருளாக இருப்பது வெங்காயம், தக்காளி தான். வெங்காயம் தக்காளி இல்லையென்றால் நம்மால் ஒரு உணவு செய்ய முடியாது. குழம்பு, வறுவல், சட்னி போன்ற ஏதும் செய்வதாக முக்கிய பொருளாக இருக்கிறது. இதனை விலை ஏறிக்கொண்டே போனால் வாங்குவதற்கு சிரம படுவீர்கள். அதனால் தக்காளியை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி நீண்ட நாட்கள் வர என்ன செய்ய வேண்டும்:

தக்காளி நீண்ட நாட்கள் வர என்ன செய்ய வேண்டும்

தக்காளி வாங்கி வந்த பிறகு கெட்டு போகாமல் இருப்பதற்கு வழிகளை பார்ப்பதை விட வாங்குவதற்கு முன்னரே யோசிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டுமென்றால் தக்காளி வாங்கும் போதே நல்ல தக்காளி எது ரொம்ப பழுத்த தக்காளி எது என்று பார்த்து வாங்க வேண்டும்.

ஒரு இரண்டு நாட்கள் சமைப்பதற்கு ஏற்ப பழுத்த தக்காளியாக வாங்கி கொள்ள வேண்டும். அடுத்து செங்காயாக வாங்கி கொள்ள வேண்டும். ஏன் செங்காயாக வாங்கி கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அதுவே கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க ஆரம்பிக்கும். நீங்கள் பழுக்க பழுக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

மழை காலத்தில் காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்க இதை செய்யுங்க..!

கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்:

தக்காளி பழுப்பதற்கு காரணமே அதன் காம்புகள் தான். காம்புகள் உள்ள இடத்தில் காற்று போகின்ற அளவிற்கு இருந்தால் சீக்கிரம் தக்காளி கெட்டு போகிவிடும். அதனால் காம்பு பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். காயாக உள்ள தக்காளி, பழுத்த தக்காளி,செங்காய் தக்காளி என் தனித்தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன் பிறகு தக்காளி காம்பு உள்ள பகுதியை குப்பற வைத்து வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் காம்பு பகுதியில் காற்று உள்ளே போகாதவாறு இருக்கும், இதனால் நீண்ட நாட்கள் தக்காளி கெட்டு போகாமல் இருக்கும்.

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement