பேக்கிங் சோடா ஒன்று போதும் வீட்டில் இருக்கும் எல்லா கரப்பான் பூச்சியும் வயிறு வெடிச்சி செத்துப் போய்டும்..!

Advertisement

வீட்டில் நிறைய கரப்பான் பூச்சி இருக்கா.. அப்போ இதை மட்டும் செய்யுங்க 100% செத்தொழியும்..! How to Kill Cockroaches in House in Tamil..!

How to Kill Cockroaches in House in Tamil – வீட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் அதனை பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும். மற்றும் வீட்டில் உணவு பொருட்களை சாப்பிடவே அச்சமாக இருக்கும். வீட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுத்தும். ஆக இந்த கரப்பான் பூச்சியை நமது வீட்டில் இருந்து அகற்ற சில டிப்ஸினை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸ் அனைத்துமே மிக எளிமையானதாக இருக்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கரப்பான் பூச்சியை நமது வீட்டில் இருந்து அகற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சமையல் சோடா மற்றும் சர்க்கரை:

கரப்பான் பூச்சி ஒரு சுகாதாரமற்ற மற்றும் அதனை பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் ஒரு பூச்சியாகும். ஆக இது எந்த வீட்டிலும் விரும்பத்தகாத விருந்தாளியாக இருக்கும். இதனை அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களா? சரி அப்படியென்றால் இந்த கரப்பான் பூச்சியை நமது வீட்டில் இருந்து அகற்ற உதவும் இயற்கை வழிகளில் ஒன்று தான் இது. அதாவது சமையல் சோடா மற்றும் சர்க்கரை இரண்டும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். பிறகு கரப்பான் பூச்சி எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் இதனை தூவிவிடவும். கரப்பான் பூச்சி இதனை சாப்பிட்டு தண்ணீர் அருந்தும் போது அதன் வயிற்றின் உள்ளே வாயுவை உருவாக்கும். இதன் மூலம் கரப்பான் பூச்சி வயிறு வெடித்து இறந்துவிடும். நமது வீட்டில் உள்ள கரப்பான் பூச்சியை அகற்ற இது ஒரு சிறந்த வழியாகும்.

மேலும் இது தொடர்பான பதிவுகள் 👇
உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி வருகிறதா? அப்போ உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கும்

பிரியாணி இலை:

பிரியாணி இலை பொதுவாக அசைவ உணவுகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை நாம் கரப்பான் பூச்சியை ஒழிக்கவும் பயன்படுத்தலாம். ஆக உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் இந்த பிரியாணி இலையை வைக்கவும். இந்த பிரியாணி இலையில் இருந்து வரும் நறுமணம் கரப்பான் பூச்சிக்கு பிடிப்பதில்லை. ஆக இதனை வீட்டில் கரப்பான் பூச்சி வரும் இடம் எல்லாம் வைப்பதன் மூலம். கரப்பான் பூச்சிகள் உங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடும்.

எலுமிச்சை சாறு:எலுமிச்சை

இரண்டு எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். பின் உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி எங்கெல்லாம் வருமோ அங்கெல்லாம் இந்த எலுமிச்சை சாறை நன்றாக ஸ்ப்ரே செய்யுங்கள். எலுமிச்சை சாறில் இருந்து வரும் நறுமணத்திற்கு கரப்பான் பூச்சி உங்கள் வீட்டை விட்டு  ஓடிவிடும். மேலும் உங்கள் வீடும் நறுமணமாக இருக்கும்.

வினிகர்:வினிகர்

விற்றில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்ட இதுவும் ஒரு அருமையான வழி ஆகும். அதாவது அரை பாட்டில் வினிகருடன் சிறிதளவு புதினா எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். பின் இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி. கரப்பான் பூச்சி வரும் இடமெல்லாம் நன்றாக ஸ்ப்ரே செய்துவிடவும். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சி அனைத்து வெளியேறிவிடும். மேலும் மீண்டும் உங்கள் வீட்டிற்கு கரப்பான் பூச்சி வராது.

வேப்பிலை எண்ணெய்:வேப்பிலை எண்ணெய்

சிறிதளவு வேப்பிலை எண்ணெயுடன் தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக்கொள்ளவும். இந்த கலவையை கரப்பான் பூச்சி வரும் இடமெல்லாம் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் உங்கள் வீட்டை விட்டு கரப்பான் பூச்சி வெளியேறிவிடும்.

மேலும் இது தொடர்பான பதிவுகள் 👇
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement