உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

Advertisement

உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

நம்மில் பலருக்கு நமது மொபைல் மிக முக்கியமான பொருட்களில் அதுவும் ஒன்று. நமது அனைத்து தேவையையும் நமது மொபைல் பயன்படுத்தி தான் இன்று இயங்கி கொண்டுள்ளது. காலையில் எழுவதற்கு அலாரம் முதல் நமது அன்றாட அனைத்து தேவையும் நமது மொபைல் செய்கிறது. நமது ஞாபகங்களான புகைப்படங்கள், மொபைல் எண்கள், புத்தகங்கள், ஏன் இப்போது பெரும்பாலானவர்க்ளின் பேங்க் ஆகவும் மொபைல் செயல்படுகிறது. எனவே, நமது மொபைலின்  ஆயுளை முடிந்தவரை நீடிக்க நம் அனைவரும் விரும்புவோம். அதனால் எவ்வாறு நமது தொலைப்பேசியை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தான். நமது மொபைலை சரியாக பயன்படுத்தினால் அதிக காலம் பயன்படுத்த முடியும். உங்கள் மொபைல் வாங்கிய முதல் இரண்டு வருடத்திலே சேதம் அடையாமல் இருக்க சில டிப்ஸ்..

மொபைலை பாதுகாக்க சில வழிகள்:

  1. தரமான மொபைல் உறையை பயன்படுத்தவும்.

உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

உங்களது போனை நீங்கள் பாதுகாக்க முதல் செயலாக, உங்கள் மொபைலுக்கு தகுந்த பேக் கவரை பயன்படுத்துவது தான். பலர் தங்கள் வாங்கிய புதிய மொபைலின்  மென்மையான பின்புற உணர்வை விரும்புவதால், பேக் கவரை பயன்படுத்துவதில்லை. இதனால் மொபைலின் மென்மையான பகுதி சீக்கிரம் விரிசல் ஏற்படுகிறது.

உங்கள் மொபைலின் பின்புறத்தில் பேக் கவரை ஒட்டியுள்ளதால், நீங்கள் கவனம் இன்றி செயல்பட்டால் கூட அதிக பாதிப்பு ஏற்படாது.

 

2.மொபைல் திரையை பாதுகாக்க 

மொபைலின் முன்புற திரையை பாதுகாக்க உங்கள் மொபைலை முடிந்தவரை புதியது போல் வைத்திருக்க விரும்பினால் டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்துவது சிறந்தது. டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்தவில்லை என்றால் கறைகள், கீறல்கள் மற்றும் விரிசல் போன்றவை உங்களது மொபைல் திரையை பாதிக்கும்.

மொபைல் போனில் சவுண்ட் அதிகரிக்க Settings-ல் இந்த ஆப்ஷனை மட்டும் மாத்திடுங்க..

3. தூசிகளில் இருந்து உங்கள் மொபைல் பாதுகாக்க 

நீங்கள் சாப்பிடும் போதும் சரி, பயணத்தின் போதும் சரி உங்கள் மொபைல் அதிகப்படியான கறைகளை கொண்டு இருக்கும். அந்த கறை உங்களது ஆரோக்கியம் மற்றும் உங்களது மொபைலின் பாதுகாப்பையும் குறைக்கும். எனவே அந்த மோசமான கறைகளை சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உங்கள் மொபைல் மீது தூசி படிவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்களது மொபைலை பயணத்தின் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம். சாப்பிடும் போது எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்து தள்ளி பயன்படுத்தவும்.

4. மொபைல் பேட்டரியை கவனித்துக் கொள்ள வேண்டும்.

மொபைலை பாதுகாக்க சில வழிகள் 

பலருக்கு, அவர்களது மொபைலில் முதலில் பிரச்சனை வருவது பேட்டரியில் தான். நல்ல ஆயுள் கொண்ட பேட்டரியை வாங்குவது முதல் படியாகும். நல்ல தரமான ஆயுள் கொண்ட பேட்டரியை பயன்படுத்தினாலும் அதனை பயன்படுத்தும் விதத்தால் அதன் ஆயுட்காலம் குறையலாம். உங்கள் பேட்டரி ஆயுட்காலம் குறையாமல் இருக்க உங்கள் போனை சரியான முறையில் சார்ஜ் செய்ய வேண்டும். உங்கள் மொபைலின் background ஆப் பயன்பாடுகளை முடக்குவது மற்றும் உங்களுக்கு தேவையில்லாத
அறிவிப்புகளை முடக்குவதன் மூலம் உங்கள் பேட்டரி திறனை அதிகரிக்கலாம்.

தேவையில்லாத சமயத்தில் உங்களது Wifi மற்றும் புளூடூத்தை முடக்குவது,
உங்கள் மொபைல் திரையின் பிரகாசத்தை குறைத்து பயன்படுத்துவது,
பேட்டரி சேமிப்பான் (Battery Saver) பயன்படுத்துவது, அதிர்வுகளை (vibration) தேவையில்லாத சமயத்தில் அணைத்து வைப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்களது பேட்டரி ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.

 

மொபைல் போனில் சார்ஜ் மெதுவாக ஏறுதா.! அப்போ இந்த தப்பை செய்கிறீங்க.என்ன தப்புனு தெரிஞ்சுக்கோங்க

5. புதிய அப்டேட்களை நிறுவுக

உங்கள் மொபைலில் அடிக்கடி அப்டேட் செய்ய Notification வரும். அதனை நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாது. நீங்கள் உடனே உங்கள் மொபைலை அப்டேட் செய்ய வேண்டும். நீங்கள் அப்படி அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் மொபைலை வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் மொபைல் மெதுவாக இயங்கத் தொடங்கும்.

உங்கள் மொபைல் ஆயுட்காலம் அதிகரிக்க எங்களது பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்! மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை பின் தொடரவும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement