உங்க வீட்டு கிச்சன் பக்கமே கரப்பான் பூச்சி வரக்கூடாதுனா இதை செய்யுங்க போதும்..!

Advertisement

கரப்பான் பூச்சி வராமல் தடுக்க

கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன தான் செய்வது என்பது தான் ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களின் பிரச்சனையாகவும் இருக்கிறது. ஏனென்றால் கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் சும்மா இருக்காமல் கிச்சன் முழுவதையும் படாத பாடு படுத்திவிடுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரம் மற்றும் பொருட்கள் என இவற்றையும் நாசம் செய்து விடுகிறது. இவ்வாறு பாடாய் படுத்தும் கரப்பான் பூச்சி வீட்டிற்கு வராமல் இருக்க என்ன செய்வது என்று தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து உங்களுக்கு பயனுள்ள தகவலை தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

How to Make a Homemade Cockroach Killer:

முதலில் கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வராமல் இருக்க ஒரு ஜெல் தயாரிக்க வேண்டும். அத்தகைய ஜெல்லை தயாரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  1. கடுகு எண்ணெய்- 1 ஸ்பூன் 
  2. சூடம்- 5
  3. முட்டை- 1
  4. ஷாம்பு- 2 ஸ்பூன் 

வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லையா…அப்போ இதை மட்டும் செய்யுங்க.. எலி தலைதெறிக்க ஓடிவிடும்..

கரப்பான் பூச்சிக்கு ஜெல் தயாரிப்பு:

 கரப்பான் பூச்சி வராமல் தடுக்க

இப்போது ஒரு பவுலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பவுலில் 5 சூடத்தை போட்டு பொடியாக செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து பவுலில் உள்ள சூடத்துடன் 2 ஸ்பூன் ஷாம்பு சேர்த்து நன்றாக ஸ்பூனால் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1 முட்டையினை உடைத்து ஊற்றி 2 நிமிடம் வரை ஸ்பூனால் கலந்து விடுங்கள்.

2 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து மீண்டும் இதை ஒரு முறை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது கரப்பான் பூச்சியினை விரட்டக்கூடிய ஜெல் தயார்.

நீங்கள் இப்போது ஒரு காட்டன் துணையினை சிறு சிறு உருண்டையாக உருட்டி அதை இந்த ஜெல்லில் நனைத்து கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் வைத்தால் போதும் கடுகு எண்ணெய் மற்றும் மற்ற பொருட்களின் வாசனையால் கரப்பான் பூச்சி வரவே வராது. 

அதேபோல் இந்த உருண்டையினை 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

கொசு தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு கொசு கூட இருக்காது
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement