ஒரே கொசு தொல்லையா இருக்கா..! அப்படினா கொசு தொல்லையில இருந்து தப்பிக்க இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

How to Make a Mosquito Repellent Gel  

ஒரு மனிதனுக்கு வீட்டில் சுதந்திரம் என்பதே இல்லாமல் போயிட்டது. ஏன் தெரியுமா..? ஏன்னா காலையில் இருந்து மாலை வரையும் வேலைக்கு சென்று விட்டு 6 மணிக்கு மேல் வீட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இதற்கு மாறாக மாலை 6 மணிக்கு மேல் கொசுவானது அதனுடைய சேட்டையினை ஆரம்பித்து விடுகிறது. அதாவது 6 மணிக்கு மேல் அனைவருடைய வீட்டிலும் கொசுக்கடி தொல்லை தான் அதிகமாக இருக்கிறது. சரி கொசுக்களை விரட்டுவதற்கு கடைகளில் விற்கும் Liquid-ஐ  பயன்படுத்தினாலும் கூட ஒரு 20 நிமிடம் தான் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கிறது. இவற்றை எல்லாம் நினைத்து சிலர் மனிதர்களுக்கு வீட்டில் சுதந்திரம் இல்லை என்று புலம்புகிறார்கள். இனி நீங்கள் இவற்றை எல்லாம் சொல்லி புலம்ப வேண்டாம். ஏனென்றால் இன்றைய டிப்ஸ் பதிவில் கொசுக்களை வீட்டில் இருந்து விரட்டுவதற்கான ஜெல் மற்றும் ஸ்பிரே எப்படி தயாரிப்பது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொசுவை விரட்ட:

கொசுவை விரட்ட

  • ஆலிவ் எண்ணெய்- 100 மில்லி
  • தேங்காய் எண்ணெய்- 100 மில்லி
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

முதலில் மேலே எடுத்துவைத்துள்ள பொருட்களுக்கு ஏற்ற அளவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு ஆற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

அதன் பின்பு ஒரு பாட்டிலில் 100 மில்லி ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் அடுத்தபடியாக எலுமிச்சை சாறு சேர்த்து அனைத்தினையும் பாட்டிலில் வைத்தே கீழே சிந்தாதவாறு ஒன்றோடு ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது ஜெல் தயார்.

இதில் தண்ணீரை அதிகமாக சேர்க்காமல் இருந்தால் தான் ஜெல் பதத்திற்கு வரும். ஆகையால் சரியான பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை கொசுக்கள் வரும் இடத்தில் வைத்தால் போதும் கொசுக்கள் வீட்டிற்குள் வராது.

கொசு தொல்லை அதிகமாக இருக்க அப்போ இந்த செடியை வீட்டில் வைத்து பாருங்க

கொசுவை விரட்ட எளிய வழி:

கொசுவை விரட்ட எளிய வழி

  • கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன் 
  • ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன் 

கொசுவை விரட்ட மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். பின்பு இந்த ஜெல்லை ஒரு பாட்டிலில் சேர்த்து கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் பாட்டிலின் மூடியினை திறந்து வைத்தால் போதும் கொசுக்கள் தொல்லையே இல்லாமல் போய்விடும்.

அழையா விருந்தாளிகள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க இந்த ஸ்பிரே போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement