How to Make Coconut Oil at Home in Tamil
தினமும் நமது பதிவின் மூலம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எளிமையான முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி..? என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக தேங்காய் எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு சென்று பணம் கொடுத்து தான் வாங்கி வர வேண்டும். அப்படி கடைகளில் பணம் கொடுத்து வாங்கும் தேங்காய் எண்ணெய் அனைத்தும் தூய்மையாக இருக்குமா என்றால் அதற்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால் இனிமேல் அப்படி கடைக்கு சென்று வாங்க வேண்டாம் நமது வீட்டிலேயே மிகவும் தூய்மையான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Homemade Coconut Oil in Tamil:

முதலில் தேங்காய் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- முற்றிய நிலையில் உள்ள தேங்காய் – 4
- தண்ணீர் – தேவையான அளவு
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 நன்கு முற்றிய நிலையில் உள்ள தேங்காயின் மேலே உள்ள ஓடுகளை நீக்கிவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து ஒரு மிக்சி ஜாரில் நாம் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து தேங்காய் பாலினை மட்டும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
ஸ்டேப் – 3
பின்னர் நாம் வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பாலினை குளிர்சாதன பெட்டியின் உரைப்பானில் (Fridge Freezer) 2 மணிநேரம் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு உறைந்து கட்டியாக இருக்கும்.
ஸ்டேப் – 4
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் பால் கட்டிகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டால் அதிலிருந்து தேங்காய் எண்ணெய் பிரிந்து வரும்.
அதனை மூடிபோட்ட கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது Homemade தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது. நீங்களும் இந்த எளிமையான முறையை பயன்படுத்தி வீட்டிலேயே தேங்காய் எண்ணெய்யை தயாரித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |













