இனி வீட்டிலேயே 10 நிமிடத்தில் கம்ஃபர்ட் லிக்யுட் செய்யலாம்.. செய்முறை விளக்கம் இதோ..!

Advertisement

How to Make Comfort Liquid in Tamil

வணக்கம் நண்பர்களே.. பலரது வீட்டில் கம்ஃபர்ட் லிக்யுட் பயன்படுத்துவீர்கள்.. இதனை பயன்படுத்துவதால் துணிகள் நன்கு நறுமணமாக இருக்கும். இந்த லிக்விட்டை நமது வீட்டிலேயே தயார் செய்யலாம். இதற்கு அதிக செலவு ஆகாது. துணிகளும் எந்த ஒரு சேதமும் ஏற்படாது. வாசனைக்கு நமக்கு பிடித்த Perfume-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை நீங்கள் ஒரு தொழிலாக கூட செய்யலாம். அல்லது உங்கள் வீட்டு தேவைக்கு மட்டும் தயாரித்துக்கொள்ளலாம், எதுவாக இருந்தாலும் அது உங்கள் விருப்பம். இனி நாம் அதிக காசு கொடுத்து கடைகளில் விற்பனை செய்யும் கம்ஃபர்ட் லிக்யுட் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. சரி வாங்க இந்த கம்ஃபர்ட் லிக்யுட் வீட்டிலே எப்படி செய்யலாம். இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவோம்.

தேவையான பொருட்கள்:

  • மினரல் வாட்டர் – ஒரு லிட்டர்
  • தூள் உப்பு – 300 கிராம்
  • Sles chemical – 200 ml
  • உங்களுக்கு பிடித்த Liquid Perfume – 50 ml
  • உங்களுக்கு பிடித்த புட் கலர் – இரண்டு சிட்டிகை

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

கம்ஃபர்ட் லிக்யுட் செய்முறை:

ஒரு பெரிய பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு லிட்டர் மினரல் வாட்டரை ஊற்றவும்.

பின் 150 கிராம்  தூள் உப்பை சேர்த்து ஒரு குச்சியை பயன்படுத்தி நன்றாக கலந்துவிடவும்.

உப்பு நன்றாக கரைந்ததும் Sles Chemical-ஐ 200 ml சேர்த்து கிளறிவிடுங்கள்.

பிறகு Perfume 50 ml சேர்த்து கிளறிவிடுங்கள்.

பிறகு இரண்டு சிட்டிகை புட் கலர் மற்றும் 150 கிராம் தூள் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

அனைத்து கலவையும் ஒன்றாக கலந்த பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி நீங்கள் துணிகளுக்கு பயன்படுத்தலாம்.

இதனை தயார் செய்வதற்கு குறைந்தது 100 ரூபாய் தான் செலவு ஆகும்.

மேல் கூறப்பட்டுள்ள Sles Chemical-ஐ நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் கெமிக்கல் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். மேலும் அங்கேயே Comfort Liquid-ற்கான Perfume -ம் விற்கப்படுகிறது. அதனையும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழைய புடவையை 10 நிமிடத்தில் மெத்தையாக மாற்றிடலாம்.. அதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க

குறிப்பு:

இந்த Homemade Comfort Liquid-ஐ தயாரிக்கும்போது கைகளில் கிளவுஸ் போட்டுக்கொள்ளவும்.

மேலும் கலவையை கிளறிவிட குச்சியைத்தான் பயன்படுத்த வேண்டும். கைகளால் கிளறிவிடக்கூடாது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement