உங்கள் வீட்டில் குக்கர் இருந்தால் போதும் 1/2மணிநேரத்தில் கெட்டி தயிர் தயார்செய்யலாம்..!

curd making in tamil

கெட்டி தயிர் செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே..!. நாம் சாப்பிடும் உணவில் தயிர் கட்டாயமாக இருக்கும். ஆனால் தயிரை யாறும் வீட்டில் உறை ஊற்றுவது இல்லை. முதல் நாள் உரை ஊற்றினால் தான் மறுநாள் தயிர் சாப்பிட முடியும்.  நவீன காலத்தில் யாறும் தயிரை வீட்டில் உரை  ஊற்றுவது இல்லை. கடைகளில் வாங்கி தான் உபயோகிக்குறோம். அப்படி நாம் வாங்கி சாப்பிடும் தயிர் நமக்கு நல்லது கிடையாது . இனி உங்கள் வீட்டில் குக்கர் மட்டும் இருந்தால் போதும் எளிய முறையில் ஆரோக்கியமான கெட்டி தயிர் தயார் செய்யலாம். 1/2 மணிநேரத்தில் கெட்டி தயிர் செய்வது எப்படி? என்று இன்றைய பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

கெட்டி தயிர் செய்முறை:

ஸ்டேப்-1

கெட்டி தயிர் தயார் செய்ய முதலில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து கொள்ளவும். அதாவது 2 தேக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்தால் போதுமானது. (குறிப்பு : தண்ணீர் எதனால் சேர்க்க வேண்டும் என்றால் பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்கும் என்பதற்காகவும் எளிதில் பாத்திரம் விலக்கலாம் என்பதற்காகவும்). அதன் பின் பாலை அந்த பாத்திரத்தில் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும்.

பால்

ஸ்டேப்-2:

தண்ணீர் சேர்க்காமல் பால் நன்றாக காய்ந்த பிறகு பாலை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரம் உங்கள் வீட்டின் குக்கரில் பாதி அளவு இருக்கவேண்டும்.

ஸ்டேப்-3:

பால் மிதமான சூட்டில் இருக்கும் போது குக்கரில் நன்றாக கொதிக்கும் நீரினை ஊற்றவேண்டும். பிறகு பால் எடுத்து வைத்துள்ள பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும்போது அந்த பாத்திரத்திற்கு பாதி அளவு தண்ணீர் வைக்க வேண்டும்.

ஸ்டேப்-4:

குக்கரை நாம் வழக்கமாக சமைக்கும் போது மூடுவது போல் மூடி வைக்கவேண்டும். பால் ஊற்றி வைத்துள்ள குக்கரை குளிர்ச்சியான இடத்தில் வைக்க கூடாது. மிதமான சூடு இருக்கும் இடத்தில் தான் இருக்கவேண்டும்.

ஸ்டேப்-5:

அதன் பிறகு அறையில் உள்ள வெப்பநிலை மற்றும் குக்கரில் ஊற்றி இருக்கும் தண்ணீரின் சூட்டில் தான் தயிர் கெட்டியாகும். அதனால் கவனமாக பார்த்து கொள்ளவும்.

ஸ்டேப்-6:

1/2 மணி நேரம் இப்படி செய்தால் போதும். அதன் பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நீங்கள் எதிர் பார்த்த சுவையான கெட்டி தயிர் தயார்நிலையில் இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்