பாலை தயிராக்க உறைமோர் தேவையில்லை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்…!

Advertisement

பாலை தயிராக மாற்றுவது இப்படி..?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உறைமோர் இல்லாமல் பாலை தயிராக்குவது எப்படி இன்று தெரிந்துகொள்ளலாம். மோர் உறை ஊற்றவேண்டும் என்றால் பாலை நன்றாக காய்ச்சி அதன் பிறகு தான் உறை ஊற்றுவார்கள். ஆனால்  எல்லோருடைய வீட்டிலும் உறை மோர் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு சில நேரம் உறை மோர் இல்லாத போது கடைகளில் தயிர் வாங்க வேண்டியதாக இருக்கும். முதல் நாள் இரவு மோர் உறை ஊற்றினால் தான் மறுநாள் காலையில் தயிராக மாறும். இனிமேல் இப்படி செய்ய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து பாலை எளிய முறையில் உறை மோர் இல்லாமல் தயிராக்கலாம். தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்கள் வீட்டில் குக்கர் இருந்தால் போதும் 1/2மணிநேரத்தில் கெட்டி தயிர் தயார்செய்யலாம்..!

பாலை தயிராக மாற்றக்கூடிய பொருட்கள்:

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உறை மோர் இல்லாமல் பாலை தயிராக்குவதற்கான செய்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பச்சை மிளகாய் 
  • காய்ந்த மிளகாய் 
  • இஞ்சி 
  • 1 ரூபாய் நாணயம்

ஸ்டேப்-1

green chill in tamil

உறை மோர் இல்லாமல் பாலை தயிராக மாற்றுவதற்கு முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்க வேண்டும். பால் மிதமான சூட்டில் இருக்கும்போது 2 பச்சை மிளகாய் காம்பு நீக்காமல் அப்படியே போடா வேண்டும். மறுநாள் நீங்கள் எதிர்பார்த்த தயிர் ரெடியாக இருக்கும்.

ஸ்டேப்-2

red chill in tamil

அதே போல்  2 காய்ந்த மிளகாய் எடுத்துக்கொண்டு பால் காய்ச்சி பிறகு மிதமான சூட்டில் இருக்கும் பாலில் போடும்போது பால் தயிராக மாறிவிடும்.

ஸ்டேப்-3

ginger in tamil

ஒரு சிறிய இஞ்சி துண்டு எடுத்துக்கொண்டு தோல் இல்லாமல் நன்றாக சீவிய பிறகு அதே போல் காய்ச்சிய பாலில் போட்டால் போதும். உறை மோர் இல்லாமலே நீங்கள் எதிர்பார்த்த கெட்டி தயிர் கிடைக்கும்.

ஸ்டேப்-4

rubai coin in tamil

1 ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அதாவது புதிய சில்வர் நாணயமாக இருக்க வேண்டும். அதன் பிறகு எப்போதும் செய்வது போல் பால் மிதமான சூட்டில் இருக்கும்போது அந்த நாணயத்தை போடவேண்டும். (குறிப்பு: பால் நன்றாக உறைந்து தயிராக மாறியவுடன் அந்த நாணயத்தை வெளியில் எடுத்துவிடவேண்டும்) அதன் பிறகு தான் அந்த தயிரை சாப்பிடவேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வைத்து மோர் உறை ஊற்றும்போது 12 மணிநேரம் கழித்த பிறகு தான் பால் தயிராக மாறும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement