தசாங்கம் சாம்பிராணி செய்வது எப்படி.?
தசாங்கம் வாசனையாகவும், நறுமணமாகவும் இருக்க கூடும். இதனை நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே தசாங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தசாங்கத்தை நம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் போது வீடு முழுவதும் வாசனையாக இருக்கும். கடைகளில் விற்கும் தசாங்கம் எளிதில் எரிந்து விடும். அதற்கு மேலும் வாசனையாக இருப்பதற்கு மற்றும் நீண்ட நேரம் எரிவதற்கு இந்த பதிவில் உள்ள குறிப்பை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தசாங்கம் சாம்பிராணி செய்முறை:
சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!
தசாங்கம் சம்பிராணி கடைகளில் தூளாகத்தான் கிடைக்கும். கடைகளில் விற்கும் தசாங்கத்தை வீட்டில் ஏற்றி வருவீர்கள். இதனை ஏற்றி வைத்தவுடன் சிறிது நேரத்திலே எரிந்து முடியக் கூடியதாகும். இந்த பிரச்சனை தீர்க்கும் வகையில் சிறிய குறிப்பினை பற்றி தெரிந்து கொள்வோம்.
குறிப்பு : 1
முதலில் தசாங்க தூளை எடுத்து கொள்ளவும். பிறகு தசாங்கம் ஈரப்பதமாக இருந்தால் அது நெருப்பு பிடித்து எரியாது. அதனால் தசாங்கத்தை காய வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஜவ்வாது, கோரோசனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் தூள், தசாங்க தூள் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். தசாங்கத்தின் அச்சில் கலந்து வைத்த பொடியை சேர்த்து கொள்ளவும். பிறகு அதன் மேல் நல்ல அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதன் பின் தசாங்கத்தின் அச்சியை தலை கீழாக கவிழ்த்தால், கோன் வடிவில் தசாங்கம் நமக்கு கிடைத்து விடும்.
உங்கள் வீட்டில் ஊதுபத்தி ஏத்தும் பழக்கம் இருக்கா..? அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
குறிப்பு :2
தசாங்க அச்சு இல்லையென்றால் ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்பூன் எடுத்து கொள்ளவும். பிறகு தசாங்கபொடியை வைத்து கொள்ள வேண்டும். அந்த ஸ்பூனில் வைத்து தசாங்கம் பொடியை அழுத்தம் கொடுத்து தலை கீழாக கவிழ்த்து கொள்ளவும். பிறகு இதனை தூப காலில் தசாங்கத்தை சேர்த்து கொண்டு, அதன் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்தால் நீண்ட நேரம் எரியும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | கள்ஆன்மிக தகவல் |