தித்திக்கும் சீனி உருண்டை செய்வது எப்படி.?

Advertisement

Jini Urundai 

வணக்கம் நண்பர்களே.. தீபாவளி பலகாரத்தில் முறுக்கு, அதிரசத்திற்கு அடுத்தபடியாக இருப்பது சீனி உருண்டை தான். அதுமட்டுமில்லாமல், சீனி உருண்டை பாரம்பரிய இனிப்பு பலகாரமாகவும் உள்ளது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது சீனி உருண்டை. சீனி உருண்டையை  மிகவும் சுலபமாக 10 அல்லது 15 நிமிடத்தில் செய்து விடலாம். ஓகே வாருங்கள் இந்த தீபாவளிக்கு தித்திக்கும் ஜீனி உருண்டை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • சீனி – 250 கிராம் 
  • ரவா – 250 கிராம் 
  • முந்திரி பருப்பு – 25
  • ஏலக்காய் – 4
  • நெய் – தேவையான அளவு 

How To Make Jini Urundai in Tamil:

ஸ்டேப் -1

முதலில் அடுப்பில் ஒரு வாணலை வைத்து கொள்ளுங்கள். இதில் ரவையை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

அடுத்து இதனை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

இதேபோல், மீண்டும் மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சீனியை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

தீபாவளிக்கு புதுசா முந்திரி பாதாம் கட்லி செய்து பாருங்க..

 சீனி உருண்டை செய்வது எப்படி

ஸ்டேப் -4

இப்போது, அடுப்பில் ஒரு வாணலை வைத்து 4 ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து கொள்ளுங்கள். நெய் உருகியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

அடுத்து, பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து, இதில் அரைத்து வைத்துள்ள சீனி மற்றும் ரவை மாவை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். அதாவது முந்திரிபருப்பு மாவுடன் நன்கு சேரும்வரை பிசைந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6

மீண்டும், அடுப்பில் ஒரு வாணலை வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து உருக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவிற்கு மாவை பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

nei urundai

ஸ்டேப் -7

இறுதியாக, மாவு சூடாக இருக்கும்போதே நீங்கள் விரும்பிய அளவில் உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க.. 10 நிமிடத்தில் சூப்பரான தித்திக்கும் சீனி உருண்டை ரெடி..!

வீட்டில் முறுக்கு மாவு இப்படி அரைத்து பாருங்கள்.. முறுக்கு மொறுமொறுன்னு டேஸ்டா இருக்கும்..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement