உங்களின் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

How to make Natural Room Freshener Spray in Tamil

பொதுவாக ஒரு சிலருக்கு அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படும். அவர்கள் நன்கு ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் சுற்றுசூழல் மாசுப்பட்டதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் வீட்டின் சுற்றுசூழல் அவ்வளவாக சுத்தமாக இருக்காது. மேலும் வீட்டில் துறுநாற்றங்கள் வீசும். இந்த துறுநாற்றத்தினால் சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ரூம் ஃப்ரெஷ்னர் தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Homemade Natural Air Freshener in Tamil:

Homemade Natural Air Freshener in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ரூம் ஃப்ரெஷ்னர் தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த Homemade ரூம் ஃப்ரெஷ்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஆரஞ்சு தோல் – 4 கைப்பிடி அளவு 
  2. வினிகர் – 4 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  4. Rende Mais Type Clear – 2 டேபிள் ஸ்பூன்
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1
  6. தண்ணீர் – தேவையான அளவு 

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 கைப்பிடி அளவு ஆரஞ்சு தோலினை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

அது நன்கு கொதித்த பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 4 டேபிள் ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் Rende Mais Type Clear லீகுய்டை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்திர்கள் என்றால் உங்களின் வீடு மிக மிக நறுமணத்துடன் இருக்கும்.

வீட்டில் தொல்லை செய்யும் எலியை நிரந்தமாக விரட்ட அரிசி மாவு மட்டும் போதும்

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா அப்போ இதை செய்யுங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement