பூக்காத ரோஜா செடியில் பூ பூப்பதற்கு அஞ்சறை பெட்டியில் உள்ள 2 பொருட்கள் போதும்..!

Advertisement

ரோஜா பூ செடிகள்

வணக்கம் நண்பர்களே..! ரோஜா பூ என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அந்த ரோஜா பூவில் நிறைய வகையான நிறங்கள் உள்ளன. அந்த செடிகளை பிடித்த நிறங்களில் வாங்கி சிலர் வீட்டில் வளர்த்து வருகின்றனர். அப்படி ஆசையாக வாங்கி வைத்த ரோஜா செடிகளில் ஒரு சில செடிகளில் மட்டும் பூ பூக்காமல் இருக்கும். அந்த செடியை என்னதான் தனியாக பராமரித்து வந்தாலும் பூ பூக்காமல் அப்படியே இருக்கும். அது மாதிரி பூ பூக்காமல் இருக்கும் ரோஜா செடிகளில் புதிதாக பூ பூக்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய பொதுநலம். காம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

ரோஜா செடியில் நிறைய பூ பூக்க:

உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடிகளில் பூ பூக்க வைப்பதற்கு நீங்கள் கடைகளில் விற்கும் மருந்து பொருட்களை வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் 2 பொருட்கள் மட்டும் போதும்.

ரோஜா செடியில் பூ பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தொடரை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

டிப்ஸ்- 1

ரோஜா செடியில் இருக்கும் மண்ணை எப்போதும் காற்றோட்டமாக வைய்யுங்கள். அப்படி வைத்தால் தான் ரோஜா செடிக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். தினமும் அந்த ரோஜா செடிக்கு தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்து இருங்கள்.

டிப்ஸ்- 2

ரோஜா செடியில் புதிதாக பூ பூக்க வைப்பதற்கு கடுகு மற்றும் வெந்தயத்தை எடுத்து கொள்ளுங்கள். அந்த 2 பொருட்களையும் தனித்தனி பவுடராக அரைத்து அதன் பிறகு இரண்டையும் கலந்து விடுங்கள்.

ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try…

டிப்ஸ்- 3

இந்த 2 பொருட்களிலும் கால்சியம், மெக்னீசியம், நைட்ரஜன் இது போன்ற ரோஜா செடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. அதனால் உங்கள் வீட்டு ரோஜா செடியில் புதிதாக பூ பூக்கும்.

டிப்ஸ்- 4

அடுத்ததாக உங்களுடைய வீட்டில் இருக்கும் ரோஜா செடியின் வேர்களை சுற்றிலும் உள்ள மண்ணை கைகளால் கிளறி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்த பவுடரை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் அளவு பவுடர் மட்டும் அந்த வேரில் படுமாறு தூவி விடுங்கள். அதன் பிறகு எப்போதும் போல் தண்ணீர் ஊற்றுங்கள்.

டிப்ஸ்- 5

இது மாதிரி 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த பவுடரை ரோஜா செடியின் வேர்களில் தூவி விடுங்கள். இந்த பவுடரில் உள்ள சத்துக்கள் நேரடியாக வேறுக்குள் சென்று ஒவ்வொரு கிளையிலும் அதிக பூக்கள் பூக்கும்.

டிப்ஸ்- 6

ரோஜா பூக்களை செடிகளில் இருந்து பறிக்கும் போது ஒரு சில இலைகளை விட்டு காம்புடன் பறிக்கவும். அப்படி பறித்தால் தான் மீண்டும் அந்த கிளையில் இருந்து நிறைய பூக்கள் பூக்கும்.

டிப்ஸ்- 7

கடைகளில் கிடைக்கூடிய கடுகு புண்ணாக்கை வாங்கி கொண்டு அதில் 4 துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரை ரோஜா செடிக்கு தெளியுங்கள். நிறைய பூக்கள் பூக்கும்.

முட்டை ஓடு, டீ தூள், பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள், புளித்த மோர், புளித்த மாவு இதுபோன்ற பொருட்களையும் வீணாக்காமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்துங்கள்.

மாடித்தோட்டம் ரோஜா பயிரிடும் முறை..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement