சாம்பிராணி செய்யும் முறை – How to Make Sambrani at Home in Tamil
பொதுவாக நமது வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் வீட்டில் விளக்கேற்றி நறுமணம் நிறைந்த பூக்கை வைத்து சாமி கும்பிடுவோம். பிறகு சாமி படங்களுக்கு வைத்த பூக்களை குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம். இனி அவ்வாறு செய்ய வேண்டும், இன்று நாம் அந்த காய்ந்த பூக்களை வைத்து வீட்டிலேயே நன்கு நறுமணம் வீசக்கூடிய சாம்பிராணியை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க சாம்பிராணி செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி தயார் செய்ய வேண்டும் என்று என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- காய்ந்த பூக்கள் – இரண்டு கைப்பிடியளவு
- கற்பூரம் – மூன்று
- ஏலக்காய் – 10
- பச்சைக்கற்பூரம் – ஒரு துண்டு
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- கிராம்பு – 10
- கட்டி சாம்பிராணி – ஒன்று
- தசாங்கம் – இரண்டு ஸ்பூன்
- நெய் – இரண்டு ஸ்பூன்
- பன்னீர் – சிறிதளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 3 பொருள் போதும்..! கருத்த கேஸ் பர்னர் வெண்மையாக மாற..!
செய்முறை:
முதல்ல காய்ந்த பூக்களை மீண்டும் வெயிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு மிக்சி ஜாரில் காய்ந்த பூக்கள் இரண்டு கைப்பிடியளவு, ஏலக்காய் 10, கற்பூரம் மூன்று, கிராம்பு 10, பச்சைக்கற்பூரம் ஒரு துண்டு, சோம்பு ஒரு ஸ்பூன், கட்டி சாம்பிராணி ஒன்று மற்றும் தசாங்கம் இரண்டு ஸ்பூன் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அதனை ஒரு அகலமான பிளேட்டில் கொட்டி வெயிலில் ஒரு நாள் முழுவதும் காயவைக்கவும்.
பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து உங்களுக்கு விருப்பமான சைசில் வடிவமைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது எல்லாம் எடுத்து பூஜையறையில் சாம்பிராணி ஏற்றி வையுங்கள் நல்ல நறுமணம் வீசும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரண்டே பொருளில் உங்கள் கேஸ் ஸ்டவ் பிசுபிசுப்பு நீங்கி பளிச்சென்று மாறிடும்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |