அரைமணி நேரத்தில் கெட்டி தயிர் வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

கெட்டி தயிர் செய்வது எப்படி.? | How to Make Thick Curd at Home in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது அரைமணி நேரத்தில் கெட்டி தயிர் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க போகிறோம். தயிர் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருளும் கூட. இந்த தயிர் சைவ மற்றும் அசைவ ஆகிய இரண்டு உணவுகளுக்கும் மிகவும் பயன்படும் பொருள். இத்தகைய தயிரை பெரும்பாலோனோர் தற்போது கடையில் தான் வாங்கி பயன்படுத்துகின்றன. ஆனால் முன்பெல்லாம் தயிரை வீட்டில் தான் முதல் நாளே உறையூற்றி வைப்பார்கள். பின் மறுநாள் சாப்பிடுவார்கள். அதன் சுவையும் அருமையாக இருக்கும். கெட்டி தயிர் தயார் செய்ய ஒருநாள் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம்இல்லை. வெறும் அரைமணி நேரம் காத்திருந்தால் போதும். சரி வாங்க அரைமணி நேரத்தில் கெட்டி தயிர் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. பால் – 1/2 லிட்டர்
  2. தயிர் – ஒரு ஸ்பூன்
  3. வெந்நீர் – ஒரு கப்
  4. குக்கர் – ஒன்று

கெட்டி தயிர் செய்வது எப்படி? – செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

1/2 லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 முதல் 10 நிமிடம் வரை காய்ச்சிக்கொள்ளுங்கள். அவ்வப்போது கரண்டியை பயன்படுத்தி கிளறிவிடுங்கள்.

ஸ்டேப்: 2

10 நிமிடம் காய்ச்சிய பாலை ஒரு பவுலில் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

ஸ்டேப்: 3

பிறகு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும், பின் அதில் தயிர் சேர்த்து கலந்து வைத்திருக்கும் பால் பாத்திரத்தை அதில் வைக்கவும்.

ஸ்டேப்: 4

பிறகு அந்த பாத்திரத்தை ஒரு சிறிய பிளேட் போட்டு மூடவும். பின் குக்கரையும் மூடி விசில் போடவும், பின் அரைமணி நேரம் வரை காத்திருக்கவும்.

ஸ்டேப்: 5

அரைமணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டியான தயிர் உங்களுக்கு கிடைத்துவிடும். கண்டிப்பாக இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  –> Beauty tips in tamil
Advertisement