எத்தனை வருடமானாலும் டைல்ஸ் தரை பளிச்சென்று இருக்க இதை செய்திடுங்க..

how to make tiles glossy

டைல்ஸ் தரை புதிது போல இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் .?

பொதுவாக வீடு கட்டிய புதிதில் அழகாக இருக்கும். நாளடைவில் வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் பழைய வீடு போல் மாறிவிடும். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடு சொல்லவே வேண்டாம். வீடு முழுவதும் குப்பைகளாக தான் இருக்கும். மேலும் தரையில் ஏதாவது கிறுக்கி வைத்திருப்பார்கள். அதனை சுத்தம் செய்தாலும் நீங்கவே நீங்காது. அதனால் தான் இந்த பதிவில் வீட்டை புதிது போல வைத்திருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

டைல்ஸ் தரை புதிது போல் இருக்க:

இன்றைய கால கட்டத்தில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டை அழகாக வைத்து கொள்ள முடிவதில்லை. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று அன்று தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். அதனால் இந்த பதிவில் வீடு புதிதாகவே வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

30 வருட டைல்ஸ் கரையை 3 ரூபாயில் கிளீன் செய்யாலாம்..!

வீட்டை பெருக்க வேண்டும்: 

டைல்ஸ் தரை புதிது போல் இருக்க

தினமும் வீட்டை இரண்டு வேலை பெருக்க வேண்டும், இரண்டு வேலை முடியவில்லை என்றால் ஒரு வேலையாவது பெருக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மாப் போட வேண்டும்:

டைல்ஸ் தரை புதிது போல் இருக்க

வாரத்தில் ஒரு நாள் வீடு முழுவதும் பெருக்கி விட்டு மாப் போட வேண்டும். முக்கியமாக மாப் போட்டு விட்டு fan-யை போடாதீர்கள். ஏனென்றால் Fan-யை போட்டு காய விட்டால் தரையானது வெள்ளை வெள்ளையாக காணப்படும். அதனால் சிறிது நேரம் விட்டாலே அதுவாகவே காய்ந்து விடும்.

கிச்சனை சுத்தம் செய்வது:

டைல்ஸ் தரை புதிது போல் இருக்க

சமைப்பது பெரிய வேலையாக இருக்காது, அந்த கிட்சனை சுத்தம் செய்வது தான் பெரிய வேலையாக இருக்கும். கிட்சன் அழகாக இருந்தாலே வீடு அழகாக இருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சமைத்து முடித்தவுடன் ஒரு காட்டன் துணியை நனைத்து கேஸ் அடுப்பு மற்றும் கேஸை சுற்றி உள்ள இடம் அனைத்தையும் சுத்தம் செய்து விடுங்கள். இது போல் செய்வதினால் அழுக்குகள் சேராமல் கிட்சன் பளிச்சென்று இருக்கும்.

உங்க வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டுமா  அப்போ இதை ட்ரை பண்ணுங்க 

வாரத்தில் ஒரு நாள் கேஸ் அடுப்பு பர்னர், கேஸ் ஸ்டாண்ட் போன்றவற்றை சுத்தம் செய்திட வேண்டும். கேஸ் அடுப்பையும் துணி துவைக்க பயன்படுத்தும் துணி பவுடரை சேர்த்து ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து கழுவி விட வேண்டும். 

பாத்ரூம் சுத்தம் செய்வது:

டைல்ஸ் தரை புதிது போல் இருக்க

பாத்ரூமை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் நாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும். தினமும் பாத்ரூமை கிளீன் செய்தால் தான் நாற்றம் வராமலும், பாத்ரூம் பளிச்சென்றும் இருக்கும். தினமும் கிளீன் செய்ய முடியவில்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil