ஒரு மாதத்திற்கான பாத்திரம் துலக்கும் லிக்விடை தயாரிக்க இந்த 4 பொருட்கள் போதும்.. வீட்டிலேயே தயார் செய்திடலாம்..

Advertisement

விம் லிக்விட் தயாரிப்பது எப்படி? | How to Make Vim Liquid at Home in Tamil

ஹாய் தினமும் எல்லார் வீட்டிலும் சமைத்துவிட்டு அதிகப்படியான பாத்திரங்களை கழுவோம். அந்த பாத்திரத்தை தேய்ப்பதற்கு கண்டிப்பாக கடைகளில் விக்கப்படும் பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் லிக்விடை பயன்படுத்துவோம். இதற்கு செலவு செய்யும் காசு கண்டிப்பாக 100 ரூபாய்க்கு மேல் தான் இருக்கும். நமக்கு இந்த பாத்திரம் துலக்கும் லிக்விட் தயார் செய்ய தெரிந்துவிட்டால் இதற்கு தனியாக மாதம் மாதம் பணம் செலவு செய்வதை தவிர்க்க முடியும். சரி இதை எப்படி தயார் செய்வது எனக்கு தெரியாது என்று கூறுகிறீர்களா.. அப்படியென்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பாத்திரம் துலக்கும் லிக்விட் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். பணத்தை மிச்சம் பண்ணுங்கள், சரி வாங்க தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி தயார் செய்யலாம் என்று பார்த்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. SLES லிக்விட் (sodium lauryl ether sulfate) – 200 மில்லி
  2. மினரல் வாட்டர் 800 மில்லி
  3. லெமன் எசன்ஸ் 1 மூடி
  4. மஞ்சள் நிற ஃபுட் கலர் – 1/4 ஸ்பூன்
  5. உப்பு – 40 கிராம்

கெமிக்கல் பொருட்கள் விற்கும் கடைகளில் SLES கெமிக்கல் வேண்டும் என்று கேட்டால் கொடுப்பார்கள். ஒரு லிட்டர் அளவு பாட்டிலில் இது நமக்கு கிடைக்கும். அதை வாங்கி தேவையான அளவு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடைய விலை ஒரு லிட்டரே 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விம் லிக்விட் செய்முறை – How to Make Vim Liquid at Home in Tamil:

விம் லிக்விட் தயார் செய்வதற்கு முதலில் ஒரு ஆகலமான சில்வர் பாத்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.

அவற்றில் SLES கெமிக்கலை 200 மில்லி அளவு சரியாக அளந்து ஊற்றவும்

அதன் பிறகு 800 மில்லி மினரல் வாட்டரை ஊற்றவேண்டும்.

இதையடுத்து லெமன் எசன்ஸ் ஒரு மூடி ஊற்ற வேண்டும்.

பிறகு மஞ்சள் நிற ஃபுட் கலர் 1/4 ஸ்பூன் சேர்த்து வேண்டும்.

பிறகு தூள் உப்பு 40 கிராம் சேர்த்து ஒரு கரண்டியை வைத்து கலக்கும் போது இரண்டே நிமிடத்தில் நமக்கு தேவையான ஜெல் கிடைத்து விடும். இந்த ஜெல்லை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாது.

இந்த லிகிவிடை பயன்படுத்தி பாத்திரங்களை விலகினால் பாத்திரம் நன்கு பளிச்சென்று இருக்கும். மேலும் இது கைகளுக்கு எந்த ஒரு பாதிப்புகளையும் கொடுக்காது. ஒரு வேளை உங்களுக்கு உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்து இந்த லிக்விட் அலர்ஜி ஏற்படுத்தினால், இதை நீங்கள் பயன்படுத்த வேண்டாம் அதன்பிறகு தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement