கருத்து போன பழைய கவரிங் நகையை புதியது போல மாற்ற இந்த 1 பொருள் போதும்..!

Advertisement

கவரிங் நகைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் வீட்டில் இருக்கும் பழைய கவரிங் நகைகளை புதிதாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துக் கொள்ளப்போகிறோம். பெண்கள் அனைவருக்கும் கவரிங் நகை மீது ஒரு விருப்பம் இருக்கும். அதனால் அவர்களுக்கு பிடித்தமான டிசைனில் வித விதமாக நகைகளை  வாங்குவார்கள். ஆனால் அந்த நகைகள் கூடிய விரைவில் பழையது போல் ஆகிவிடும். அதன் பின்னர் அந்த நகைகளை உபயோகப்படுத்த மாட்டார்கள். இனி இந்த மாதிரி செய்ய வேண்டாம். பழைய கவரிங் நகைகளை உங்கள் வீட்டில் டீ போடும் டீத்தூளை மட்டும் வைத்து புதியது போல பளபளக்க வைக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ கை வைக்காமலேயே பழைய வெள்ளை துணியை புதியது                                      போல மாற்றுவதற்கும் வாசனையாக வைப்பதற்கும் இந்த                                 ஒரு டிப்ஸ் போதும்..!

பழைய கவரிங் நகையை புதியது போல மாற்ற டிப்ஸ்:

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய கவரிங் செயின், தோடு, வளையல், மோதிரம் இதுபோன்ற எந்த பொருளாக இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து புதியது போல பளபளக்க வைக்கலாம். அதற்கான செய்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • டீத்தூள்- 1/3 ஸ்பூன் 
  • பேக்கிங் சோடா- 1/2 ஸ்பூன் 
  • ஷாம்பு- 1/2 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொளுத்துங்கள் அதில் ஒரு பெரிய பவுலில் சுத்தமான தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதன் பிறகு மேலே கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் சேர்த்து அந்த தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 2

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி வைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி பிறகு அதனை தனியாக வைத்து விடுங்கள்.

பழைய கேஸ் அடுப்பை புதியது போல் மாற்றுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா..!

ஸ்டேப்- 3

இப்போது நீங்கள் வடிகட்டிய தண்ணீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நகைகளை அதில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவையுங்கள்.

ஸ்டேப்- 4

1/2 மணி நேரம் நகைகள் தண்ணீரில் ஊறிய பிறகு ஒரு பழைய பிரஷை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பிரஷை வைத்து லேசாக நகைகளை சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு துணியால் அந்த நகைகளை துடைத்து விட்டு பாருங்கள். உங்களுடைய பழைய கவரிங் நகைகள் புதியது போல பளபளக்கும்.

ஸ்டேப்- 5

அதை போலவே மஞ்சள் தூளிற்கு பதிலாக பேஸ்ட் அந்த தண்ணீரில் கலந்து ஒரு பிரஷ் வைத்து வெள்ளி பொருட்களை சுத்தம் செய்தால் வெள்ளி பொருட்களில் உள்ள அழுக்குகள் நீங்கி பளபளக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement