தேங்காய் எண்ணெய் தயார் செய்ய இனி நீங்கள் கடைக்கு செல்ல வேண்டாம்…!

Advertisement

How To Prepare Coconut Oil in Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் வீட்டில் இருந்த படியே தேங்காய் பாலில் இருந்து தேங்காய் எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப்போகிறோம். தேங்காய் எண்ணெயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. சிலர் வீட்டில் தேங்காய் நிறைய இருக்கும் ஆனால் எண்ணெய் ஆட்டுவதற்கு செக்கிற்கு செல்ல நேரம் இருக்காது. அதனால் கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துவார்கள். இனி நீங்கள் இது மாதிரி செய்ய வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்த படியே ஆரோக்கியமான தேங்காய் எண்ணெய் தயார் செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ உங்கள் வீட்டில் பொருட்கள் வீணாகாமல் இருக்க இதை                        தெரிந்துக்கொண்டால் போதும்..!

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:

how to make coconut oil in home tamil

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்கு எடுத்து வைத்துள்ள தேங்காய் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் கழித்து அந்த தேங்காயை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து தேங்காய் ஓடு இல்லாமல் வெரும் தேங்காயை மட்டும் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது நறுக்கி வைத்துள்ள தேங்காயை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வடிகட்டி வைத்து அந்த தேங்காய் பாலை வடிகட்டி தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்ததாக வடிகட்டிய தேங்காய் பாலை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஊற்றி மூடி fridge-ல் வைத்து விடுங்கள். 3 மணி நேரம் கழித்து fridge-ல் இருந்து தேங்காய் பாலை வெளியே எடுத்து விடுங்கள்.

இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

ஸ்டேப்- 4

அதன் பிறகு அந்த தேங்காய் பால் பாத்திரத்தை திறந்து பாருங்கள். இப்போது தேங்காய் பால் தண்ணீர் கீழே இருக்கும் கொழுப்புகள் மட்டும் அந்த மூடியின் மேலே இருக்கும்.

ஸ்டேப்- 5

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த தேங்காய் கொழுப்பை எடுத்து அந்த பாத்திரத்தில் போட்டு நன்றாக காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து கொண்டு இருக்கும் போதே சக்கை மேலே திரண்டு வரும்.

ஸ்டேப்- 6 

அந்த சக்கையை அப்படியே விடாமல் எடுத்துக்கொண்டே இருங்கள். அப்போது தான் எண்ணெய் நல்ல பதத்திற்கு வரும். எண்ணெய் அடிபிடித்து விடாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் தேங்காய் எண்ணெய் உங்கள் வீட்டிலேயே தயார்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement