வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

15 நாட்கள் ஆனாலும் கொத்தமல்லி இலை வாடி வதங்கி போகாமல் Fresh-ஆ இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: October 3, 2023 9:50 AM
Follow Us:
How to Preserve Coriander Leaves in Tamil
---Advertisement---
Advertisement

How to Preserve Coriander Leaves in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உயிர்வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது என்றால் அது உணவு தான். அப்படி நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவினை தயாரிக்க தேவையான பொருட்களை நாம் மிக மிக கவனமாக தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வோம். ஆனாலும் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதிலும் குறிப்பாக காய்கறிகள் மிக மிக குறைந்து காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது சமையலின் நறுமணத்திற்கு உதவும் கொத்தமல்லி இலையை நீண்ட நாட்களுக்கு வாடி வதங்காமல் வைத்திருக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி இலை வாடாமல் இருக்க டிப்ஸ்:

How to preserve coriander leaf in tamil

பொதுவாக நமது சமையலுக்காக வாங்கும் காய்கறிகளை மிக மிக கவனமாக பார்த்து பார்த்து வாங்குவோம். ஆனாலும் அவற்றை நீண்ட நாட்களுக்கு நம்மால் சேமித்து வைத்து கொள்ள முடியாது.

அதேபோல் தான் நமது சமையலின் நறுமணத்திற்கு உதவும் கொத்தமல்லி இலையையும் நாம் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து வாங்கினாலும் அவற்றை நம்மால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து கொள்ள முடியாது.

அதனால் தான் நாம் வாங்கு கொத்தமல்லி இலையை நீண்ட நாட்களுக்கு Fresh-ஆ வைத்திருக்க உதவு குறிப்புகளை பற்றி இங்கு காணலாம் வாங்க.

கைவலிக்க தேய்க்காமல் உங்க வீட்டு தரையில் படிந்துள்ள கறையை போக்க இதை ட்ரை பண்ணுங்க

டிப்ஸ் – 1

முதலில் ஒரு கபில் முக்கால் கப் தண்ணீரை எடுத்து கொள்ளவும். பிறகு அதில் நாம் வாங்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையின் வேர்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு அந்த தண்ணீரில் வேர் மட்டும் படுமாறு 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனின் வேர்களை நீக்கிவிட்டு அவற்றை ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பையின் உட்புறத்தில் கொத்தமல்லி இலை இருக்குமாறும் மேற்புறத்தில் அதனின் தண்டு பகுதி இருக்குமாறு வைத்து உங்களின் பிரிட்ஜில் வைக்கவும்.

இதனின் மூலம் 15 நாட்கள் ஆனாலும் அந்த கொத்தமல்லி வாடி வதங்கி அழுகி போகாது.

டிப்ஸ் – 2

Koththamalli leaf alugamal iruka tips in tamil

முதலில் நாம் வாங்கிவைத்துள்ள கொத்தமல்லி கட்டின் அதன் வேர்ப்பகுதியை வெட்டி விடவும். பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்னர் அதில் நாம் கொத்தமல்லி கட்டை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாக கழுவி அதனை உலர விடவும். நன்கு உலர்ந்ததை உறுதிசெய்ய கொத்தமல்லி கட்டை ஒரு பேப்பர் டவலில் ஒத்தி எடுக்கவும்.

உலர்ந்த கொத்தமல்லியை , பேப்பர் டவலில் வைத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதன் மீது ஒரு பேப்பர் டவல் போர்த்தி இறுக்கமாக மூடி வைக்கவும்.

கொத்தமல்லி இலைகளில் ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த காற்றுப்புகாத டப்பாவை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக அப்படியே இருக்கும்.

வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூம் பளபளப்பாக மாற எலுமிச்சை பழம் போதும்

டிப்ஸ் – 3

நாம் வாங்கிவைத்துள்ள கொத்தமல்லி கட்டினை அதனின் வேர்களை நீக்கிவிட்டு தண்ணீரை பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு காட்டன் துணியில் வைத்து நன்கு மூடி கொள்ளுங்கள்.

பின்னர் அதனின் மீது சிறிதளவு தண்ணீரை தெளித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அப்படியே வெளியிலும் வைத்து கொண்டும் பயன்படுத்தலாம். இதனின் மூலம் 15 நாட்கள் ஆனாலும் அந்த கொத்தமல்லி வாடி வதங்கி அழுகி போகாது.

டிப்ஸ் – 4

கொத்தமல்லி கட்டில் வேரை நீக்கிவிட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும். கழுவிய இலைகளை நன்றாக உலர விடவும். ஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும்.

பிரித்து வைத்த ஒவ்வொரு பகுதி கொத்தமல்லி கட்டையும் ஒவ்வொரு பேப்பர் டவலில் சுற்றி கொள்ளவும். சுற்றி வைத்த கட்டுகளை ஒரு ஜிப் லாக் பையில் போட்டுக் கொள்ளவும்.

எல்லா கட்டுகளையும் பையில் வைத்து சரியாக மூடி பிரிட்ஜில் வைக்கவும். இந்த முறையை பயன்படுத்துவதால் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக அப்படியே இருக்கும்.

வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை தங்க முடியலையா அப்போ புதினாவை இப்படி பயன்படுத்துங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!