How To Prevent Ice Buildup in Freezer Fridge
இப்போது ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரை அனைத்து வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் உள்ளது. இருந்தாலும் இந்த ஃப்ரிட்ஜ் எப்படி பராமரிப்பது என்பது பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. முக்கியமாக ஃப்ரிட்ஜில் உள்ள ஃபிரீஸரை எப்படி பயன்படுத்துவது என்று பலபேருக்கு தெரிவதில்லை. அதாவது, ஃப்ரீசருக்குள் சுரக்கும் நீரை நாம் முறையான பராமரிப்பின்றி விட்டுவிட்டால் அது எளிதில் ஐஸ் கட்டியாக மாறி ஃபிரீஸர் முழுவதும் உறைந்து பனிமலை போல் ஆகிவிடுகிறது. இதனால் ஃபிரீஸரில் எந்த பொருட்களையும் வைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே இதனை தடுக்க நாம் என்னென்ன வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips To Prevent Ice Build Up in Tamil:
டிப்ஸ் -1
ஃபிரீஸரை சுத்தம் செய்யும்போது உப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யவும். அதாவது, சோப்பு போட்டு ஃபிரீஸரை சுத்தம் செய்த பிறகு, உப்பு கலந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரீஸரை நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஃபிரீஸரை எளிதில் கட்டி பிடிக்காமல் இருக்கும்.
டிப்ஸ் -2
எப்போதும் ஃபிரீஸரில் மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் சரியான அளவில் வேலை செய்து கொண்டிருக்கும் ஃபிரீஸர் அதிகமான ஆற்றலுடன் இயங்க தொடங்கும். ஃப்ரீசர் அதிக வெப்பநிலையில் அல்லது அளவுக்கு மிஞ்சிய குளிர்த்தன்மையுடன் இயங்கினால் ஃபிரீஸரில் கட்டிகள் பிடிக்க தொடங்கும்.
அதேபோல், ஃபிரீஸரில் அளவுக்கு அதிகமான பொருட்களை வைக்க கூடாது. ஏனென்றால் ஃபிரீஸரில் கட்டிபிடிக்க இதுவும் ஒரு காரணமாகும்.
டிப்ஸ் -3
ஒரு பொருளை ஃபிரீஸருக்குள் வைக்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக ஃபிரீஸரில் ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்துவிட்டு அதன் பிறகு, பொருட்களை வையுங்கள். அதேபோன்று, ஃபிரீஸரை அதிகமாக திறந்துவிட வேண்டாம். மேலும், நீண்ட நேரம் ஃபிரீஸரை திறந்தும் வைக்க கூடாது.
டிப்ஸ் -4
ஃபிரீஸரை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெற்றால் வாரம் ஒருமுறை சுத்தம் செய்தால் ஃபிரீஸரில் உள்ள பனிக்கட்டி உருகி தண்ணீராக வந்துவிடும்.
ஐந்தே நிமிடத்தில் அடிப்பிடித்த பாத்திரம் பளப்பளக்க இந்த டிப்ஸ மட்டும் Follow பண்ணுங்க..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |