How To Keep Onions For Long Time in Tamil
வெங்காயம் இல்லாமல் எந்தவிதமான சமையலும் இல்லை. அந்த அளவிற்கு சமையலில் ருசியையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது. இப்படி அணைத்து சமையலுக்கு வெங்காயம் பயன்படுவதால் இதனை நாம் அதிகமாக வாங்கி வந்து வீட்டில் சேமித்து வைத்திருப்போம். ஆனால் ஒரு சில நாட்களிலேயே வெங்காயம் அழுக தொடங்கிவிடும். எனவே இதனை தடுக்கக்கூடிய சில வழிகளை இப்போது பார்க்கலாம். அதாவது வெங்காயம் 1 மாதம் வரை கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Store Onions For Long Time in Tamil:
டிப்ஸ் 1:
முதலில் வெங்காயம் வாங்கும்போதே கீறல் இல்லாத உலர்ந்த நன்கு தரமாக இருக்கும் வெங்காயத்தை வாங்க வேண்டும். ஏனென்றால் கீறல் அல்லது அடிபட்ட வெங்காயம் இரண்டே நாட்களிலேயே அழுக தொடங்கிவிடும்.
டிப்ஸ் 2:
வெங்காயத்தை ஈரப்பதம் உள்ள இடத்தில் வைக்கக்கூடாது. ஏனென்றால் வெங்காயம் அழுகுவதற்கு முதல் எதிரி ஈரப்பதம் தான். எனவே ஈரப்பதம் உள்ள இடத்தில் வெங்காயம் வைப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு மாறாக உலர்ந்த இடத்திலோ அல்லது காற்றோட்டம் உள்ள இடத்திலோ வைக்க வேண்டும்.
தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா ஆச்சரியமாக இருக்கே ..
டிப்ஸ் 3:
வெங்காயத்தை வாங்கி வந்ததும் அதனை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி கொள்ளுங்கள். அதன் பிறகு, அதனை பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து சேமித்து வையுங்கள் அல்லது காற்று செல்லக்கூடிய உலர்ந்த அட்டை பெட்டியில் போட்டு வைத்து விடுங்கள்.
டிப்ஸ் 4:
வெங்காயத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்க கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு காய்கறியும் அழுகும்போது ஒரு வாயுவினை வெளியிடும். இந்த வாயுவானது மற்ற காய்கறிகளையும் எளிதில் அழுக செய்து விடும். எனவே வெங்காயத்தை தனியாக வைத்து சேமியுங்கள்.
விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….
ஒரு வாரம் ஆனாலும் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |