How To Prevent Phone From Overheating in Tamil
இக்காலத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இருக்கிறது. சொல்லப்போனால் ஸ்மார்ட் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்றே சொல்லலாம். மனிதனின் அன்றாட தேவைகளில் ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் நமக்கு தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற பல நிகழ்வுகள் செல்போன் வெடிப்பதனால் ஏற்படுகிறது. பொதுவாக செல்போனை அதிகநேரம் பயன்படுத்துவதால் அதன் பேட்டரி ஹீட் ஆகி வெடித்து விடுகிறது. அதிலும் இந்த வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் விரைவில் ஹீட் ஆகிவிடும். எனவே இதனை தடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Keep Phone From Overheating in Sun in Tamil:
போனிற்கு கவர்களை காட்டாயம் போட வேண்டும்:
அனைவருமே ஏதோ ஒரு தேவைக்காக வெளியில் நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்வோம். அப்படி செல்லும்போது வெயிலில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய கட்டாயம் இருக்கும். அப்போது போனை பயன்படுத்துதல் கூடாது அல்லது அதிக நேரம் பயன்படுத்த கூடாது.
அதுமட்டுமில்லாமல், போனில் கவரை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் செல்போன் கவர்களை அணியாமல் வெயிலில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது வெப்பம் நேரடியாக போனின் பேட்டரியில் பட்டு பேட்டரி வெப்பமடைந்து விரைவில் ஹீட் ஆகிவிடும். இதனால் போன் வெடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே, போன் கவர்களை அணிவது மிகவும் அவசியம்.
சார்ஜ் செய்யும் முறை:
வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் போனிற்கு சார்ஜ் செய்யாதீர்கள். ஏனென்றால், வெயிலில் சென்று வந்ததால் போன் ஹீட்டாக இருக்கும். அந்நேரத்தில் போனிற்கு சார்ஜ் செய்தால் இன்னும் அதிகமாக ஹீட் ஆகும்.
அதுமட்டுமில்லாமல், மதிய நேரத்தில் போனிற்கு சார்ஜ் செய்வது நல்லது அல்ல. எனவே, இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும், எந்நேரத்திலும் போனிற்கு சார்ஜ் போட்டுக்கொண்டே போனை பயன்படுத்த கூடாது. இது வெயில் காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும்.
நீங்க யூஸ் பண்ற Smart போன்ல இவ்ளோ நாளா இதை கூட தெரிஞ்சுக்காமலா இருக்கீங்க ..!
சேதமடைந்த செல்போன்களை பயன்படுத்த கூடாது:
கோடைகாலத்தில் நல்ல நிலையிலிருக்கும் போன்களே வெப்பமடைந்து வெடித்து விடுகிறது. அப்படி இருக்கையில் சேதமடைந்த, அதாவது பேட்டரி பழுதாகி இருக்கும் போன்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக வெயிலின் தாக்கத்தினால் வெடித்து விடும். எனவே, பழுதாகி இருக்கும் போன்களை பயன்படுத்த வேண்டாம்.
பாஸ்ட் சார்ஜிங் மற்றும் நீண்ட நேரம் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்:
வெயில் காலத்தில் நீண்ட நேரம் போனிற்கு சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இப்போது இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும்போது, போனின் பேட்டரி அதிகமான மின்சாரத்தை உள்வாங்கும். இதனால் விரைவில் போன் வெப்பமடைந்து விடுகிறது. எனவே, ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதையும் நீண்டநேரம் சார்ஜ் செய்வதையும் தவிர்த்து கொள்ளவேண்டும்.
AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!
போனிற்கு தகுந்த கம்பெனி சார்ஜரை பயன்படுத்தவும்:
போன் வெடிப்பதற்கு முக்கிய காரணம் அதன் பேட்டரி தான். எனவே சார்ஜ் செய்யும் போது போனிற்கு கொடுக்கப்பட்ட கம்பெனி சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் போனின் திறனிற்கு ஏற்றவாறு தான் அதனுடைய சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு மாறாக வேறொரு சார்ஜரை பயன்படுத்தினால் போனின் பேட்டரி சேதமடைந்து விடும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |