கார் மற்றும் வண்டிகளில் துரு பிடிக்காமல் இருக்க இதை Follow பண்ணுங்க

how to prevent rust underneath car in tamil

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வண்டி மற்றும் கார்களில் துரு பிடிக்காமல் இருக்க என்ன செய்வது என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக வண்டி மற்றும் கார் இருந்தாலே துரு பிடிக்காமல் இருக்குமா என்று யோசிப்பீர்கள்..! இதை எப்படி துரு பிடிக்காமல் பார்த்து கொள்ள முடியும் என்று நினைப்பீர்கள். ஒரு பொருள் வைத்திருந்தால் பராமரிப்பு ரொம்ப முக்கியம். நாம் பராமரிக்கும் முறையை வைத்து அந்த பொருள் நீடித்து உழைப்பதும், உழைக்காமல் போவதும் உங்கள் கையில் தான் உள்ளது. அந்த வகையில் கார் மற்றும் வண்டிகளை எப்படி துரு பிடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

கீறல் பட்டால் கவனிக்க வேண்டும்:

உங்கள் காரிலோ அல்லது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சிறு கீறல் பட்டாலும் உடனே கவனியுங்கள். சின்ன கீறல் தானே என்று அலட்சிய படுத்தாதீர்கள். சிறு கீறல் தான் உங்கள் வண்டி முழுவதும் துரு பிடிக்க வைத்துவிடும்.

வண்டி கழுவுதல்:

துரு பிடிக்காமல் இருப்பதற்கு சிறந்த வழி அடிக்கடி கழுவ வேண்டும். அழுக்கு மற்று ஈரப்பதம் இருப்பதால் தான் துரு பிடிக்கிறது. குறிப்பாக மழை  காலங்களில் சகதிகளால் துரு பிடிக்கும். அதனால் அடிக்கடி கழுவ வேண்டும்.

தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்:

நான்கு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு வழி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பாதையில் தூசி மற்றும் அடைப்பு இருந்தாலும் துரு பிடிக்கும். கார்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி இருந்தால் விரைவில் துரு பிடிக்கும்.

வீல்களில் கவனம் தேவை:

கார்களில் வெளிப்பகுதியை மட்டும் கவனிக்க கூடாது. காரின் அடிப்பகுதியையும் கவனிக்க வேண்டும். அங்கு தான் கண்ணனுக்கு தெரியாத அழுக்குகள் தேங்கி இருக்கும். அந்த இடத்தை சுத்தம் செய்வதற்கும் கஷ்டமாக இருக்கும். காரின் அடிப்பகுதி மற்றும் வீல்களையும் சுத்தமாக வைத்திருந்தால் நீண்ட காலங்களுக்கு உங்களுது கார் புதிதாகவே இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பு காருக்கு மட்டுமில்லை இரு சக்கரம் வாகனம், நான்கு சக்கரம் வாகனங்கள்  போன்றவற்றிற்கு பொருந்தும். மேல் கூறப்பட்டுள்ளது போல் உங்களது வாகனங்களை பார்த்து கொண்டால் துரு பிடிக்காமல் நீண்ட காலங்களுக்கு புதிதாக வைத்து கொள்ள முடியும்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com