வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Updated On: April 22, 2026 5:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

How To Take Care of Plants During Summer

அனைவரது வீட்டிலும் தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருவோம். செடிகள் சாதாரணமான நாட்களை விட வெயில் காலத்தில் அதிகமாக வாடி அழிந்துவிடும் நிலைக்கு சென்று விடும். எனவே இதனை தடுக்க நாம் என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கோடை காலத்தில் செடிகளின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. செடிகளை முறையாக பராமரித்து வந்தால் மட்டுமே வெயிலின் வெப்பத்திலிருந்து செடிகளை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் செடிகள் காய்ந்து வாடிவிடும். அதன் பின், நாம் மீண்டும் தோட்டம் அமைக்க வேண்டியிருக்கும். எனவே வெயிலில் இருந்து செடிகளை பாதுகாக்கக்கூடிய சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Protect Plants From Summer Heat in Tamil:

தழைக்கூளம் இடுதல்:

 how to take care plants at home in tamil

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், சூரிய வெப்பம் நேரடியாக மண்ணில் படுவதன் மூலம் மண்ணில் உள்ள ஈரப்பதம் வற்றி காய்ந்து விடுகிறது. இவ்வாறு மண் விரைவில் காய்ந்து போவதால் அதில் உள்ள செடிகளும் காய்ந்து வாடி விடும்.

எனவே மண்ணில் உள்ள ஈரப்பதம் விரைவில் வற்றாமல் இருக்க, காய்ந்த இலை தழைகளை செடி உள்ள மண்ணிற்கு மேல் நிரப்ப வேண்டும்.

இம்முறையை நீங்கள் செய்வதால் செடி வாடாமல் இருக்கும்.

தண்ணீர் விடுதல்:

 how to care plants in summer in tamil

வெயில் காலத்தில் செடிகள் வாடாமல் இருக்க காலை, மாலை என இருவேளைகளிலும் செடியின் வேர்களுக்கு தண்ணீர் விடுதல் அவசியம். சூரியன் உதிப்பதற்கு முன் அதாவது அதிகாலையிலும், மாலையிலும் தண்ணீர் விடுதல் வேண்டும். 

அதுமட்டுமில்லாமல், செடியின் வேர்களுக்கு மட்டுமில்லாமல் செடியின் மேற்பகுதியான இலை, தண்டு போன்றவற்றிலும் தண்ணீரை தெளித்து விட வேண்டும்.

நிழல் கவர்களை அமைத்தல்:

 how to protect plants from summer heat in tamilஅதிக வெப்பத்திலிருந்து செடிகளை பாதுகாக்க செடிக்கு மேற்புறத்தில் நிழல் கவர்கள் அல்லது துணிகளை கொண்டு பந்தல் போல போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து செடிகளை 50% பாதுகாக்கலாம்.

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.  ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

அடிக்கடி களை எடுத்தல்:

 how to protect plants in summer in tamil

செடிக்கு அருகில் களைகள் வந்துவிட்டால் செடிக்கு விடும் தண்ணீரை முழுவதும் களைகள் உறிஞ்சி கொள்ளும். இதனால் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாட தொடங்கிவிடும்.

உரமிடுவதை தவிர்க்கவும்:

செடியானது கோடை காலத்தில் அதிக ஊட்டச்சத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. வெப்பத்தினால் செடி முதலில் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை மற்றும் எடுத்து கொள்ளும். இந்நிலையில் நீங்கள் உரமிட்டால் செடிகளுக்கு அது மேலும் அழுத்தத்தை தான் ஏற்படுத்தும்.

வெயில் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எது தெரியுமா..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now