How to Reduce Body Heat in Summer Season in Tamil
பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே வெப்பம் அதிகரிக்கும். அவ்வாறு வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும் பொழுதெல்லாம் நமது உடலின் உள்புற வெப்பம் அதிகரிக்கும். அப்படி நமது உடலின் வெப்பம் அதிகரிப்பதால் நமது உடலுக்கு பல வகையான உடல் நல பிரச்சனைகள் வந்து சேரும். அதனால் நமது உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அந்த நேரத்துக்கு தீர்வை அளிக்கும். அதன் பிறகு மறுபடியும் உங்களின் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அதனால் இந்த பதிவில் நிரந்தரமாக உங்கள் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் சில வழிகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன வழிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Reduce Body Heat in Tamil:
கோடை காலத்தில் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் சில வழிகளை இங்கு காணலாம்.
குளிர்ந்த பால்:

கோடை காலத்தில் காய்ச்சாத பாலை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து விடும். உடல் உஷ்ணத்தால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த முறையை கட்டாயம் தினமும் பின்பற்றினால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
தண்ணீர்:

பொதுவாக கோடை காலத்தில் நாம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உடல் சூட்டைத் தணிக்க தண்ணீரை விட சிறந்த பானம் வேறு எதுவும் இல்லை.
அதனால் உடல் உஷ்ணத்தால் அவஸ்தைப்படுபவர்கள் தங்கள் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட, சற்று அதிகமாக தண்ணீரை குடித்து வந்தால், உடலில் உள்ள வெப்பநிலை குறைந்து விடும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்
நல்லெண்ணெய்:

இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து விட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும்.
உங்களிடம் நல்லெண்ணெய் இல்லா விட்டாலும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை தடவியும் தலைக்கு குளிக்கலாம்.
காற்றோட்டமான பகுதிக்கு செல்வது:

அடிக்கடி காற்றாட வெளியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகம் உள்ளேயே, புழுக்கத்திலேயே இருக்காதீர்கள். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு இயற்கையான குளிர்ந்த காற்றை உடலுக்குக் கொடுங்கள். இதன் மூலமும் உங்களின் உடலின் உஷ்ணம் தணியும்.
கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்
தேன்:

தேனும் உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவும். அதாவது தினமும் பாலுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். அதாவது சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது மிகவும் அவசியம்.
விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெயும் உங்கள் உடல் சூட்டை குறைக்க உதவும். அதாவது சிறிதளவு விளக்கெண்ணெயை எடுத்து அதனை இரண்டு காலின் கட்டை விரலின் நகத்தில் மேல் இந்த விளக்கெண்ணையை நன்றாக தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
அதன் பின்பு ஒரு காட்டன் துணியை வைத்து அந்த விளக்கெண்ணையை நகத்திலிருந்து துடைத்து விடுங்கள். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் உங்கள் உடல் உஷ்ணம் குறைந்து விடும்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |














