கரண்ட் பில் குறைப்பது எப்படி.?
நம் முன்னோர்களின் காலத்தில் கரண்ட் வசதியே இல்லாமல் இருந்தது, ஆனால் இன்றைய கால கட்டத்தில் கரண்ட் வசதி இல்லாத வீடுகளே இல்லை. ஒரு நிமிடம் கூட Fan இல்லாமல் இருக்க முடிவதில்லை. வீட்டில எல்லா வசதியான பொருட்களும் இருக்க வேண்டும். ஆனால் கரண்ட் பில் மட்டும் ஆக கூடாது என்று நினைக்கிறார்கள். எல்லாரும் வீட்டிலும் நாளுக்கு நாள் கரண்ட் பில் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. இதனை எப்படி குறைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கரண்ட் பில்லை குறைப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கரண்ட் பிள்ளை குறைப்பதற்கு டிப்ஸ்:
தேவையில்லாத ஸ்விட்சை ஆப் செய்ய வேண்டும்:
கரண்ட் பில்லை குறைப்பதற்கான எளிய வழி பயன்படுத்தாத போது சாதனங்களை ஆஃப் செய்து வைப்பது தான். லைட்கள், ஃபேன்கள், வீட்டு உபகரண சாதனங்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் ஆப் செய்து வைக்க வேண்டும்.
மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவற்றின் சுவிட்ச்சை ஆஃப் செய்வதன் மூலம் கரண்ட்டை சேமிக்கலாம். குறிப்பாக டிவி மற்றும் ஏசி உள்ளிட்ட சாதனங்ளை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதோடு மட்டுமின்றி, அவற்றின் மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்வதன் மூலம் கரண்ட் வீணாவதை தடுக்கலாம்.
லைட்டுகளை led லைட்டுகளை வாங்குவது நல்லது. மின் பொருட்களுக்கு BEE (Bureau of Energy Efficiency) கொடுக்கும் ஐந்து விண்மீன் (5 Star) மதிப்பீடு உள்ளதா என கவனித்து பொருளை வாங்கவேண்டும்.
24 மணி நேரம் ஏசி ஓடுவதால் கரண்ட் பில் அதிகரிப்பா?
கிட்சனில் பயன்படுத்தும் பொருட்கள்:
கிட்சனில் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படும் போது மட்டும் பிளக்கை ஆனில் வைக்க வேண்டும் மற்ற நேரங்களில் அன்பிளக் செய்து விட வேண்டும். ஏனென்றால் நீண்ட நேரம் மைக்ரோவேவ், எலெக்ட்ரிக் கெட்டில், ஏர் ஃபிரையர் உள்ளிட்ட பிற ஹீட் டிவைஸ்களை பயன்படுத்துவதால் மின்சாரம் தேவைப்படுகின்றன.
பழைய பொருட்கள்:
பழைய மின்சார பொருட்கள் நல்ல கண்டிஷனில் இருத்தல் அதை மாற்றாமல் எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். இதனால் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது.
எடுத்துக்காட்டாக நீங்கள் பழைய பிரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்க வீட்டு கரண்ட் பில்லில் சுமார் 30 முதல் 40 சதவீத கட்டணம் அந்த ஃபிரிட்ஜ் காரணமாகவே வந்திருக்கும்’
மீன் தொட்டி:
மீன் தொட்டி விளக்கு, அதற்கு காற்று உந்தும் கருவிகள், தண்ணீர் வெப்பநிலை கட்டுப்படுத்தி, தண்ணீரை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் கருவிகள் என 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்குவதால், நாளொன்றிற்கு சுமார் 100 Watt/hour x 24 Hours = 2.5 kW அலகுகள் பயன்படுத்தப்படுகிறது.
மேல் கூறப்பட்டுள்ளவையை சரியாக பயன்படுத்தினாலே கரண்ட் பில்லை குறைக்கலாம்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
உங்க வீட்டிற்கு கரண்ட் பில் குறிக்க வரும் நபரின் (Electronic Technician) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |