உங்கள் வீட்டின் Electricity Bill அதிகமாக வருகிறதா.! அதனை குறைக்க டிப்ஸ்..!

how to reduce electricity bill in tamil

உங்கள் வீட்டின் Electricity Bill-லை குறைக்க டிப்ஸ்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றித்தான் பார்க்க போகின்றோம். பொதுவாக நாம் அனைவரின் குடும்பத்திலும் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது Electricity bill அதிகமாக வருவது தான். அதனை எப்படி குறைப்பது என்று தெரியாமல் நம்மில் பலரும் கஷ்டப்பட்டிருப்போம். Electricity Bill-லை எப்படி பாதி அளவிற்கு குறைப்பது என்று இன்றைய பதிவில் விரிவாக பார்க்கலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

Electricity Bill-லை குறைக்க டிப்ஸ்:

டிப்ஸ் – 1

 how to reduce power bill at home in tamil

முதலாவதாக நாம் அனைவரும் ஆண்டிற்கு 300 நாட்கள் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியுடன் கிடைக்கக்கூடிய சூரிய சக்தியில் இருந்து வீட்டிற்கு தேவையான சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு சிறந்த வழியாக உள்ள சோலார் பேனலை பயன்டுத்தலாம்.

பொதுவாக 1 kWp சூரிய கூரை ஆலை ஒரு நாளைக்கு சராசரியாக 4.6 kWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

1 கிலோவாட் சோலார் பேனலை உருவாக்க சுமார் 50,000 ரூபாய் செலவாகும். பட்டியலிடப்பட்ட அரசாங்க விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் இந்த சோலார் பேனலை வாங்கிக்கொள்ளலாம். இது போன்ற சோலார் பேனலை பயன்படுத்துவதால் உங்கள் வீட்டின் Electricity Bill-லை குறைக்க முடியும்.

டிப்ஸ் – 2

நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்விளக்குகளினாலும் மின்சாரம் அதிக அளவு செலவாகுகிறது. உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு குண்டு பல்ப் இருக்கிறது என்றால்  அதிக மின் சக்தியை எடுத்துக் கொள்கிறது.

அதற்கு பதிலாக LED bulb மற்றும் LED Tube light போன்ற விளக்குகளை பயன்படுத்துவது மின்சார செலவை குறைக்க உதவுகிறது. பயன்படுத்தாத விளக்குகளை அணைப்பதினாலும் மின்சக்தியை சேமிக்கலாம்.

டிப்ஸ் – 3

 how to reduce electricity bill at home in tamil

அடுத்து நமது மின்சார செலவை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது குளிர்சாதன பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனர் ஆகும். இவற்றை பயன்படுத்தாத  வீடுகளே இல்லை.

அதனால் இந்த குளிர்சாதன பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனர்களை  பயன்படுத்தினாலும் அவற்றிலும் மின்சக்தியை சேமிக்கலாம். முதலில் குளிர்ச்சாதன பெட்டியின் கதவுகளை அதிக நேரம் திறந்து வைக்கக்கூடாது. அப்படி பயன்படுத்துவதால் அவை மின்சக்தியை அதிகமாக பயன்படுத்துகின்றன.

அடுத்து குளிரூட்டிகள் அல்லது ஏர் கண்டிஷனர்கள் உள்ள அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டே பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அப்படி பயன்படுத்துவதால் அவை மின்சக்தியை அதிகமாக எடுத்து கொள்கின்றன. தேவைப்படாத நேரங்களில் குளிரூட்டிகளை அணைத்து வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள் பயன்படுத்தாத கணினி மற்றும் தொலைக்காட்சிகளை அணைத்து வைக்கவும். மின்விசிறிகளை தேவைபடதா நேரத்தில் அணைத்து  வைக்கவும்.

இதையும் படியுங்கள் => மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?

இதுபோன்று டிப்ஸ் பற்றி  தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil