துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க டிப்ஸ்
வெயில் காலத்தை கூட தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மழைக்காலத்தை சமாளிப்பது என்பது அவ்வளவு அரிதானது அல்ல. ஏனென்றால் மழைக்காலத்தில் துவைத்த துணிகள் காயாது, துணிகள் இருந்து துர்நாற்றம் வீசும், வீடு எப்போதும் ஈரப்பதமாக இருக்கும் என இதுபோன்ற பிரச்சனைகள் தான் அதிகமாக காணப்படும். ஆகையால் இவற்றை எல்லாம் மழைக்காலங்களில் சமாளிப்பதை விட வெயில் காலம் எவ்வளவோ மேல் என்று தான் தோன்றும். இவற்றை எல்லாம் சொல்லி புலம்பினாலும் கூட இப்போது என்ன சூழ்நிலை இருக்கிறது என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் மழைக்காலம் முதல் பனிக்காலம் போகும் வரை என துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸினை பார்க்கலாம் வாங்க..!
How to Remove Bad Odors From Clothes in Tamil:
டிப்ஸ்- 1
துணிகளை துவைக்க நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் துணி சோப்பை காட்டிலும் எலுமிச்சை கலந்து துணி சோப்பினை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் எலுமிச்சை துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் தடுக்க உதவுகிறது.
அப்படி இல்லை என்றால் துவைத்த துணிகளை அலசும் போது எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரில் அலசலாம். இவ்வாறு அலசுவதன் மூலம் துணிகளில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
டிப்ஸ்- 2
- பேக்கிங் சோடா
- வினிகர்
அதேபோல் மழைக்காலங்களில் துணிகளை துவைக்கும் போது வழக்காக நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் துணி பவுடருடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து துவைப்பதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசாது மற்றும் கரும்புள்ளிகள் எதுவும் வராது.
டிப்ஸ்- 3
நீங்கள் துவைத்து காய வைத்து மடித்து வைத்து இருக்கும் துணிகளில் ஈரமாக இருக்கும் துண்டு மற்றும் பிற ஆடைகளை போடுவது, அதன் மேலே அமர்வது என இதுபோன்றவற்றை செய்யாமல் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இத்தகைய காரணங்களாலும் துணிகளில் இருந்து துர்நாற்றம் வீசும்.
டிப்ஸ்- 4
ஒருவேளை நீங்கள் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைப்பவராக இருந்தால் அதனை சரியான முறையில் சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் வாஷிங் மெஷினில் உள்ள அழுக்குகள் துணிகள் படிவதனாலும் துணிகள் துர்நாற்றம் வீசும். ஆகையால் இத்தகைய முறையினை செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் மாவு புளிக்க மாட்டிங்குதா அப்போ காய்ந்த மிளகாய் போதும்..
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |