How to Remove Bathroom Smell in Tamil
பொதுவாக அனைவரது வீட்டிலும் பாத்ரூமை சுத்தம் செய்வது கடினமான வேலையாகும். இன்றைய காலத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு ஒரு நாளை தனியாக ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் நேரத்தை சேமித்து கஷ்டப்படாமல் இருப்பதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க .
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பாத்ரூமில் துர்நாற்றம் வராமல் இருக்க செய்முறை :
தேவையான பொருட்கள் :
- வாஷிங் பவுடர் – 400 கிராம்
- பேக்கிங் சோடா- 400 கிராம்
- உப்பு – 100 கிராம்
- சிட்ரிக் அமிலம் – 100 கிராம்
- வினிகர்- சிறிதளவு
ஸ்டெப் : 1
வாஷிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு பவுலை எடுத்து கொண்டு அதில் வாஷிங் பவுடர், பேக்கிங் சோடா, தூள் உப்பு மற்றும் சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். சிட்ரிக் அமிலம் இல்லையென்றால் எலுமிச்சை சாறை ஊற்றி பவுடரை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து விட்டு பயன்படுத்தலாம்.
ஸ்டெப் : 2
இந்த பவுடரை நன்றாக கரண்டியை கொண்டு கலக்கி கொள்ளவும். பின்பு பவுடரை பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டிலில் நிரப்பி வைப்பதன் மூலம் பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அதனை பயன்படுத்துவற்கு சுலபமாகவும் இருக்க கூடும்.
பயன்படுத்தும் முறை :
கறை மற்றும் துர்நாற்றம் இருக்கும் இடத்தில் எடுத்து வைத்த பவுடரை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதிகம் கறை மற்றும் துர்நாற்றம் இருந்தால் வினிகரை பயன்படுத்தலாம். கறை இல்லையெனில் வினிகர் சேர்க்க தேவையில்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு கம்பி நாரை கொண்டு தேய்த்தால், பாத்ரூம் பளபளப்பாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
2 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யலாம் வீட்டில் உள்ள ஒரு பொருள்..!
பாத்ரூம் பளிச்சென்று இருக்க செய்முறை:
தேவையான பொருட்கள் :
- துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் – 1 டீஸ்பூன்
- பல் துலக்கும் பேஸ்ட்- சிறிதளவு
- பேக்கிங் சோடா –சிறிதளவு
- சோடா உப்பு – சிறிதளவு
- எலுமிச்சை சாறு அல்லது (எலுமிச்சை தோல்)
- தண்ணீர் – தேவையான அளவு
ஸ்டெப் : 1
முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது லிக்விட் போன்ற ஏதாவது ஒரு பொருளை சேர்த்து அதனுடன் பல் துலக்கும் பேஸ்ட், பேக்கிங் சோடா மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இனி எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீங்க.. பாத்ரூம் முதல் வீடு கிளீன் செய்வதற்கு பயன்படுத்தலாம்..!
ஸ்டெப்: 2
பாக்டீரியா போன்ற கிருமிகளை அகற்றுவதற்கு கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை தோலின் பகுதியை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து அந்த நீரை சேர்க்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை :
பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துள்ள நீரை கறை, துர்நாற்றம் இருக்கும் இடத்தில் தெளித்து விட்டு துடப்பத்தை பயன்படுத்தி தேய்த்து கழுவி கொள்ளவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |