How To Remove Black Spots on Clothes
வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் பெண்களுக்கு பயனுள்ள வகையில் சூப்பரான ஒரு டிப்ஸ் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. பொதுவாக பெண்களுக்கு வீட்டில் இருக்கும் பெரிய வேளைகளில் முதலில் இருப்பது பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது தான். இந்த வேலைகளை தவிர்த்து அடுத்தபடியாக இருக்கும் பெரிய வேலை துணி துவைப்பது தான். வீட்டில் உள்ள அனைவரது துணிகளையம் துவைத்து காயவைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் துணியை காயவைத்து எடுப்பது தான் பெரிய வேலை. அதுமட்டுமில்லாமல், மழைக்காலத்தில் துணிகளில் கருப்பு நிற புள்ளிகள் திட்டுத்திட்டாக இருக்கும். இந்த கரும்புள்ளிகள் வெள்ளை சட்டை முதல் யூனிஃபார்ம் வரை அனைத்திலும் இருக்கும். எனவே இதனை தடுப்பது எப்படி என்பதை இப்பதிவில் பின்வமாறு பார்க்கலாம்.
துணிகளில், பல விதமான கறைகள் படும். எண்ணெய் கறை, டீ கறை மற்றும் சாய கறை உள்ளிட்ட பல கறைகள். அப்படி உண்டாகும் கறைகளில் ஒன்று தான் சிறிய சிறிய கரும்புள்ளி கறைகள். எனவே, மழைக்காலங்களில் துணைகளில் உண்டாகும் கரும்புள்ளியை போக்குவதற்கான சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Way To Remove Black Spots on Clothes:
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு:
முதலில் துணியில் கரும்புள்ளி உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு தேய்த்து விடுங்கள். அடுத்து, ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள். ஒரு பழைய டூத் பிரஷினை கொண்டு இந்த கலவையை எடுத்து துணியில் கரும்புள்ளி உள்ள இடத்தில் அப்ளை செய்து நன்கு தேய்த்து 10 நிமிடம் வரை ஊற விடுங்கள். அதன் பிறகு, துணியை நன்கு துவைத்து அலசி விடுங்கள்.
வினிகர்:
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளுங்கள். இதில், வினிகரை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். இதனை டூத் பிரஷினை பயன்படுத்தி துணியில் உள்ள கரும்புள்ளியில் அப்ளை செய்து தேய்த்து விடுங்கள். அதன் பிறகு, டெட்டர்ஜெண்ட் சோப் கொண்டு துவைத்து அலசி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் துணியில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
துணிகள் சரியாக காயாமல் துர்நாற்றம் வீசுகிறதா
நன்கு வெயில் உலர்த்த வேண்டும்:
துணியில் கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம் துணியை வெயிலில் காயவைக்காமல் இருப்பதே ஆகும். எனவே, முடிந்தவரை துணியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் காயவைத்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |