அடி பிடித்த பால் பாத்திரம்
பொதுவாக அனைவருடைய வீடுகளிலும் சமைப்பது எப்படி முக்கியமானதாக இருக்கிறதோ, அதேபோல் பாத்திரம் கழுவுவதும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் உபயோகப்படுத்தும் பாத்திரத்தை சுத்தமாக கழுவி வைத்தால் தான் அடுத்த முறை நாம் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் மிகவும் எளிமையாக செய்து முடிக்க முடியும். அந்த வகையில் பாத்திரம் கழுவுவது என்பது கொஞ்சம் கடினமான வேலையாக தான் இருக்கிறது. இவ்வாறு பாத்திரம் கழுவும் வேலையை கடினமாக இருக்கும் போதும் அடிபிடித்த பாத்திரத்தை கழுவுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதனால் இன்று அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கான டிப்ஸினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதிலும் குறிப்பாக அடிப்பிடித்த பால் பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Burnt Milk Stains From Utensils:
தக்காளி:
பொதுவாக அடிப்பிடித்த பாத்திரம் என்றால் சுத்தம் செய்ய மிகவும் கடினமாக தான் இருக்கும். அதனால் கருகிப்போன பால் பாத்திரத்தை சுத்தம் தக்காளி சாஸ் மிகவும் உகந்தது.
அதனால் அடிப்பிடித்த பால் பாத்திரத்தில் தக்காளி சாசினை நன்றாக ஊற்றி அதில் அப்படியே இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து தக்காளி சாஸ் சேர்த்து ஊற வைத்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்து பாருங்கள் எப்பேர்ப்பட்ட கருகிப் போன பாத்திரமும் பளிச்சென்று மாறிவிடும்.
குளிர்பானம்:
அடிபிடித்த பால் பாத்திரத்தில் முதலில் கருப்பு நிறத்தில் இருக்கும் குளிர் பானத்தை அந்த பாத்திரத்தில் நிறைய ஊற்றி விடுங்கள். பின்பு இந்த பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
இப்போது கொதிக்க வைத்துள்ள தண்ணீர் பாத்திரத்தில் இருக்கும் படியே ஆற விடுங்கள். அதன் பிறகு ஆறிய தண்ணீரை கீழே ஊற்றி விட்டு வழக்கமாக பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஜெல்லினை கொண்டு கழுவினால் போதும் பாத்திரம் புதியது போல பளபளக்கும்.
வீட்டை எப்போதும் வாசனையாக வைத்துக்கொள்ள இதை செய்தல் போதும் …
எலுமிச்சை:
எந்த கரையாக இருந்தாலும் அதனை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சைக்கு நிகர் எதுவும் கிடையாது. அதனால் எலுமிச்சை பழத்தில் இருந்து சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அந்த சாற்றினை அடிப்பிடித்த பாத்திரத்தில் நன்றாக அப்ளை செய்து சுமார் 1 மணிநேரம் அப்படியே வைத்து விட்டு, 1 மணி நேரம் கழித்து எப்போதும் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் ஜெல்லை கொண்டு கருகிப் போன பாத்திரத்தை சுத்தம் செய்தால் போதுமானது.
வினிகர்:
வினிகரில் அசிட்டிக் அமிலம் இருப்பதனால் இது எப்படிப்பட்ட துரு பிடித்த மற்றும் கருகிப் போன பாத்திரத்தை மிகவும் எளிமையாக சுத்தம் செய்ய உதவுகிறது.
ஆகவே முதலில் நீங்கள் 3 சொட்டு வினிகரை அடிபிடித்த பால் பாத்திரத்தில் விட்டு விட வேண்டும். பின்பு அந்த பாத்திரத்தை சுத்தம் செய்து பாருங்க பாத்திரம் கருகிப்போனது போலவே இருக்காது.
இனி கடைக்கு சென்று ஹோம் ஸ்ப்ரே வாங்க தேவையில்லை… எலும்பிச்சை மட்டும் போதும்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |