Smart Ways To Clean kitchen set tips in tamil
பொதுவாக பாத்திரங்கள் விளக்குவது மிகவும் சவாலான வேளைகளில் ஒன்று தான். அதுவும் துருப்பிடித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் பிடித்தமின்மையை உருவாக்கும். நாம் சமையலறையில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான பொருட்களும் நமது ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்துகிறது. சமைக்கும் போது கவனமின்மையால் உணவு அடிப்பிடிப்பது சாதாரணம் தான். ஆனால் அப்படி அடிப்பிடிக்கும் போது உணவு வீணாவதுடன், பாத்திரத்தின் அழகும் தான் கெடுகிறது. மேலும் அப்படி அடிப்பிடித்த பாத்திரத்தில் சமைத்தால், இன்னும் அடிப்பிடித்த நாற்றமானது வீசும். ஆகவே அடிப்பிடிக்கும் பாத்திரத்தை சுத்தமானதாக மாற்றவும்.
துருப்பிடித்த பாத்திரங்கள் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆகையால் அத்தகைய பாத்திரங்களை கையாளும் போது நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாத்திரத்தின் ஆயிலும் நாம் அதனை பராமரிப்பதில் இருக்கிறது. அந்தவகையில் இன்று நம் வீட்டில் துருப்பிடித்த பாத்திரங்களை எவ்வாறு கையாளுவது, அவற்றை எப்படி புதியது போன்று மாற்றுவது என்று சில பாட்டி சொன்ன குறிப்புகள் உங்களுக்காக…
அடிப்பிடித்த பாத்திரம் கழுவுவது எப்படி..?
அடிப்பித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய மற்றும் துருப்பிடித்த பாத்திரங்களை புதியது போல் மாற்ற உங்களுக்கான இரண்டு டிப்ஸ் இதோ…
-
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா:
வினிகர், பேக்கிங் சோடா மற்றும் வாஷிங் சோப் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பிறகு அந்த கலவையில் சிறிது நேரம் ஸ்க்ரபை ஊறவைக்கவும். பிறகு பாத்திரத்தை வெந்நீரில் அலசிய பின்னர், ஊறவைத்த ஸ்க்ரபை கொண்டு தேய்க்கவும். இந்த கரைச்சலில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் அழுக்கு மற்றும் கிரீஸை மென்மையாக நிக்க உதவுகிறது.
அடி பிடிச்ச பாத்திரத்தை கிளீன் செய்ய எலுமிச்சை மட்டும் போதும்..
2. எலுமிச்சை சாறு, உப்பு:
உங்கள் வழக்கமான சமையல் பாத்திரங்களில் அடிபிடித்துள்ள கரையை போக்க நீங்கள் உங்கள் வீட்டு சமையலில் பயன்படுத்தும் எண்ணெய், தாவர எண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய், அழுக்கு மற்றும் அடிப்பித்த பாத்திரத்தின் கரையை நீக்கலாம்.
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
தாவர எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பாத்திரங்களின் மேல் ஊற்றி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, கரடுமுரடான ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி துடைத்து, பின்னர் பாத்திரங்களை வெந்நீரில் கழுவவும். இது கறைகளை நீக்கி பாத்திரங்களை புதியது போல் மாற்றும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |