அடி பிடித்த சமைத்த உணவு என்ன செய்வது
சில நேரங்களில் சமைக்கும் பொழுது கவனக்குறைவால் அடிபிடித்து போவது இயல்பானது. அதனை கஷ்டப்பட்டும் அவ்வளவு பொருட்கள் சேர்த்து சமைத்திருப்பீர்கள். அதனை தூக்கி மனசு வராமல், சாப்பிட முடியாமலும் தவிப்பீர்கள். இனிமேல் நீங்கள் அடிபிடித்த உணவையும் சாப்பிடலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
அடிபிடித்த குழம்பை சரி செய்வதற்கு:
முதலில் தீய்ந்து போன பாத்திரத்தில் இருந்து உணவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
அடிபிடித்த குழம்பை சரி செய்வதற்கு தண்ணீர் அல்லது தேங்காய் பால் அதிகமாக சேர்க்கவும். இப்படி செய்வதினால் தீய்ந்த சுவை இல்லாமல் குழம்பை ருசியாக மாற்றும்.
இல்லையென்றால் இனிப்பு சார்ந்த சர்க்கரை, தேன், மாம்பழம் அல்லது அன்னாசி போன்றவற்றில் ஏதவாது ஒன்றை சேர்த்தாலே தீய்ந்த சுவை குழம்பு ருசியாக இருக்கும்.
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்
தயிர்:
அடிபிடித்த உணவில் தயிர் சிறிதளவு சேர்த்து கலந்தால் தீய்ந்த சுவை மாறிவிடும்.
கொத்தமல்லி மற்றும் புதினா
கொத்தமல்லி, புதினா அல்லது மசாலாவை கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் தீய்ந்த சுவை மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை சிறியதாக நறுக்கி தீய்ந்த போன உணவில் சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் ஊற விடவும். 10 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு தீய்ந்த உணவை லேசாக சூடுபடுத்தினால் ருசியாக இருக்கும்.
வீட்டில் மாப் போடும் போது இந்த ஒரு பொருளை கலந்தால் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |