அடி பிடித்த பாத்திரம்
பொதுவாக பெண்களுக்கு பாத்திரம் துலக்குவது பெரிய கஸ்டமான வேலையாக இருக்கிறது. பாத்திரம் துலக்குவதற்கு ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். அதிலும் அடி பிடித்த பாத்திரத்தை கிளீன் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அடுப்பில் வறுவளோ அல்லது குழம்போ வைப்போம். இதனை வைத்து விட்டு வேறு வேலை ஏதவாது பார்க்க போகிடுவோம். அப்படியே அந்த பாத்திரமானது அடிபிடித்து விடும். இதனை எப்படி கிளீன் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்காக இந்த பதிவில் அடி பிடித்த பாத்திரத்தை எப்படி கிளீன் செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அடி பிடித்த பாத்திரத்தை கிளீன் செய்வது எப்படி.?
வெங்காயம்:
வெங்காயம் சமையல் மற்றும் ஆரோக்கியம், அழகு குறிப்பு போன்றவற்றிற்கு மட்டும் பயன்படாமல் அடி பிடித்த பாத்திரத்தை கிளீன் செய்வதற்கும் உதவி செய்கிறது.
இதற்கு அடிபிடித்த பாத்திரத்தில் எது வரைக்கும் அடி பிடித்து இருக்கிறதோ அது வரைக்கும் தண்ணீரை நிரப்பி கொள்ள வேண்டும். வெங்காய தோல்களை அந்த நீரில் போட்டு 1/2 மணி நேரத்திற்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு பாத்திரம் ஆறிய பிறகு பாத்திரம் துலக்கும் சோப்பை பயன்படுத்தி கம்பி நார் பயன்படுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
பேக்கிங் சோடா:
அடி பிடித்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பேக்கிங் சோடா 2 தேக்கரண்டி சேர்த்து 15 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். அதன் பிறகு பாத்திரம் ஆறிய பிறகு பாத்திரம் துலக்கும் சோப்பை பயன்படுத்தி கம்பி நார் பயன்படுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
பாத்திரம் ஓட்டை ஆகிவிட்டால் தூக்கி போடாதீங்க..! நாமே சரி செய்து விடலாம்..
எலுமிச்சை பழம்:
பாத்திரம் எதுவரைக்கும் அடி பிடித்து இருக்கிறதோ அது வரைக்கும் தண்ணீரை நிரப்பி கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். 15 நிமிடம் கொதித்த பிறகு 15 நிமிடத்திற்கு அப்படியே ஊற விடவும், அதன் பிறகு பேக்கிங் சோடா பயன்படுத்தி பாத்திரத்தை தேய்த்தால் கறை எல்லாம் நீங்கி விடும்.
வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |