Tips To Temove Colour Stains From Clothes in Tamil
பொதுவாக நாம் வெள்ளை நிற ஆடைகளை அதிகமாக வாங்க விரும்ப மாட்டோம். ஏனென்றால் அதில் சிறிய கரை அல்லது சாயம் பட்டால் போகவே போகாது என்ற காரணத்திற்காக. இதனால் வெள்ளை நிற ஆடைகளை தவிர்த்து வண்ண ஆடைகளை வாங்குவோம். இருந்தாலும், ஆண்களுக்கு வெள்ளை சட்டை வாங்காமல் இருக்க முடியாது. அதேபோல், பள்ளிகளில் குழந்தைகளுக்கு வெள்ளைநிற சீருடை தான் வழங்குவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வெள்ளைநிற ஆடையை வாங்கத்தான் வேண்டும். அப்படி வாங்கிய வெள்ளைநிற ஆடைகளில் கரையோ அல்லது மற்ற உடைகளின் சாயங்களோ பட்டுவிட்டால் அதனை எப்படி எளிமையாக போக்குவது எப்படி என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Remove Color From a White Shirt in Tamil:
டிப்ஸ் -1
தேவையான பொருட்கள்:
- டிட்டர்ஜென்ட் பவுடர்
- வினிகர்
- எலுமிச்சை சாறு
முதலில் ஒரு 1/2 பக்கெட் தண்ணீரை எடுத்து கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
பிறகு கொதிக்க வைத்த தண்ணீரில் உங்கள் வெள்ளை துணியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு டிட்டர்ஜென்ட் பவுடர், வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கைபடாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, இந்த தண்ணீரில் வெள்ளை துணிகளை முக்கி 10 நிமிடம் வரை நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள். இதுவே வெள்ளை துணியில் விடப்படியான அழுக்கு மற்றும் சாயம் இருந்தால் அதனை அதிகபட்சம் 1 மணிநேரம் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, துணி துவைக்கும் பிரஷ் கொண்டு வெள்ளை துணியை நன்கு தேய்த்து விடுங்கள்.
அதன் பிறகு ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாக தண்ணீரில் அலசி விடுங்கள். அதன் பிறகு நன்கு வெளியில் காயவைத்து எடுத்தால் வெள்ளை துணியில் உள்ள சாயம் மற்றும் அழுக்கு இரண்டும் காணாமல் போய்விடும்.
ஜீன்ஸ் பேண்ட் நிறம் மாறாமல் அப்படியே இருக்கணுமா.!
டிப்ஸ் -2
தேவையான பொருட்கள்:
- டிட்டர்ஜென்ட் பவுடர் – 3 ஸ்பூன்
- சோடாப்பு – 1/2 ஸ்பூன்
- ப்ளீச்சிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
முதலில் ஒரு 1/2 பக்கெட் தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
பிறகு கொதிக்க வைத்த தண்ணீரில் உங்கள் வெள்ளை துணிகளை சேர்த்து கைபடாமல் முக்கி வைத்து கொள்ளுங்கள்.
இதனை 10 நிமிடம் ஊறவைத்து அதன் பிறகு துணி துவைக்கும் பிரஷ் கொண்டு வெள்ளை துணியை நன்கு தேய்த்து விடுங்கள்.
அதன் பிறகு ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாக தண்ணீரில் அலசி விடுங்கள்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
துப்பட்டா சாயம் போகாமல் புதியது போல இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |